அநேக ஆண்டுகளாக, இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஒருவரையொருவர் மோதிக் கொள்கின்றனர். 1947 ஆம் ஆண்டு, நிலப்பகிர்வு நடந்ததிலிருந்து இந்த மோதல் இருந்து கொண்டேயிருந்தாலும், வாகா எல்லையில், ஒவ்வொரு மாலையும், நீங்கள் பார்த்திராதவகையில், ஆடம்பரமாக, சிறப்பான வகையில், மனதைக் கவரும் வகையில், இரு தேசங்களின் ராணுவ வீரர்களும் கொடி வணக்கம் செய்து, நட்பினைத் தெரிவிக்கும் வகையில் இரு வீரர்களும் கைகளைக் குலுக்கிக் கொள்கின்றனர். பல வருட கருத்து வேறுபாடு, 3 பெரிய யுத்தங்கள் நடந்த போதிலும், அனுதினமும் நடைபெறும் இந்த உறவு, இரு நாட்டினரும் எல்லையால் பிரிக்கப் பட்டிருந்தாலும், இணக்கத்தோடு செயல்பட வழிவகுக்கின்றது.
கொரிந்து சபை விசுவாசிகள் தங்களின் முக்கிய பாதையில் எல்லைக்கோடு போட்டு பிரிக்காவிடினும், அவர்கள் பிரிந்திருக்கின்றனர். தங்களுக்கு யார் இயேசுவைக் குறித்து கற்றுக் கொடுத்தார்களோ அவர்களைச் சேர்ந்தவர்கள் என்று தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொள்கின்றனர். சிலர் பவுலைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் அப்பொல்லோவைச் சேர்ந்தவர்களென்றும், சிலர் கேபாவைச் (பேதுரு) சேர்ந்தவர்களென்றும் சொல்கின்றார்கள். பவுல் அவர்களை “ஏக மனதும் ஏக யோசனையும்” (1 கொரி.1:10) உள்ளவர்களாய் இருக்கும்படி அழைக்கின்றார். கிறிஸ்துவே அவர்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார், அவர்களுடைய ஆன்மீக வழிகாட்டியல்ல என்பதை நினைவு படுத்துகின்றார்.
நாமும் இவ்வாறே செயல்படுகின்றோம் அல்லவா? நாம் கொண்டுள்ள அதே விசுவாசத்தைக் கொண்டுள்ளவர்களை- நம்முடைய தவறான செய்கைகளுக்காக, இயேசு செய்த தியாகத்தை மறுத்து அவர்களை நண்பர்களாக பாவிப்பதற்குப் பதிலாக, எதிரிகளாக்குகின்றோம். கிறிஸ்து பிரிந்திருக்கின்றாரா? இப்புவியில் அவருடைய பிரதிநிதிகளாக இருக்கும் நாம்- அவருடைய சரீரமாக இருக்கும் நாம், முக்கியமல்லாத காரியங்களின் நிமித்தம் பிரிவினைகளை ஏற்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக அவருக்குள் நாம் ஒற்றுமையைக் கொண்டாடுவோம்.
என்னென்ன தேவையற்ற ஆவிக்குரிய பிரச்சனைகளை அனுமதிக்கின்றாய்? அதில் எது பிரிவினையைக் கொண்டுவருகின்றது? அதில் எவ்வாறு ஒற்றுமையை கொண்டுவர முடியும்?
தேவனே, நான் உம் மீதும், நீர் உம்முடைய ஜனங்களுக்காக நிறைவேற்றின தியாகத்தின் மீதும் கவனமாயிருக்க உதவியருளும். முக்கியமல்லாத காரியங்களில் கவனம் செலுத்தாமல், விசுவாசத்தில் ஒரு மனதோடு வாழ மற்றவர்களையும் அழைக்க எனக்கு உதவியருளும்.