சாரா சிறிய உருவம் கொண்டவள். ஷிரெயா முரட்டு குணமுடையள், உருவத்தில் பெரியவள், வெறுப்போடு சாராவைப் பார்த்தாள், சாரா அவளைக் கட்டாயப் படுத்தவில்லை. ஷிரெயா, ஏன்   அந்த கருகலைப்பு ஆலோசனை மையத்தில் நிற்கின்றாள் என்பதையும் தெரிவிக்கவில்லை. அவள் ஏற்கனவே “அந்த குழந்தையை அகற்றி விட” தீர்மானித்து விட்டாள். எனவே, சாரா மென்மையாகச் சில கேள்விகளைக் கேட்டாள். வேதாகமத்திற்கு எதிராகச் செயல்பட்டாலும், ஷிரெயா அவற்றை முரட்டுத்தனமாக தவிர்த்தாள். ஷிரெயா தன்னுடைய கர்ப்பத்தை கலைத்துவிடுவதில் உறுதியாக இருப்பதைத் தெரிவிப்பதற்கு அடையாளமாக அவ்விடத்தை விட்டு வெளியேறுவதற்காக எழுந்தாள்.

ஷிரெயாவிற்கும் கதவுக்கும் இடையேயிருந்த சிறிய இடைவெளியில் நுழைந்த சாரா, “நீ போவதற்கு முன்பு நான் உன்னை அணைத்துக் கொண்டு, ஜெபிக்கலாமா?” என்றாள். இதுவரை அவளை யாருமே, நல்லெண்ணத்தோடு அணைத்ததில்லை, திடீரென, எதிர்பாராத விதமாக அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

சாரா தேவனுடைய இருதயத்தை அழகாக வெளிப்படுத்தினாள். தேவன் தன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலை, “அநாதி  சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” (எரே. 31:3) என்கின்றார். அந்த ஜனங்கள் அடிக்கடி தேவனுடைய வழிகாட்டலை மீறினதால், அதன் கடினமான பின் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தனர். ஆனாலும், தேவன், “காருணியத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன். மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன்” (வ.3-4) என்கின்றார்.

ஷிரேயாவின் கதை மிகவும் சிக்கலானது (நம்மில் அநேகருடையதும்). அன்று அவள் தேவனுடைய உண்மையான அன்பிற்குள் ஓடி வரும் மட்டும், தேவனும், தேவனைப்  பின்பற்றுபவர்களும் அவளைக் குற்றவாளியென்று ஒதுக்குவர் என்று நினைத்திருந்தாள். ஆனால், சாரா வேறுவிதமான ஒன்றைக் காட்டினாள், தேவன் நம்முடைய பாவத்தை வெறுத்தாலும், நாம் நினைப்பதற்கும் மேலாக அவர் நம்மை நேசிக்கின்றார். அவர் நம்மை தனது விரிந்த கரங்களுக்குள் அழைக்கின்றார், நாம் அவரை விட்டு ஓடிப் போகத் தேவையில்லை.