சமீபத்தில், அமெரிக்காவிலுள்ள ஒரு பட்டணத்தின் காலி இடங்களிலிருந்த களைகளை அகற்றி விட்டு, அழகிய மலர்களைத்தரும் செடிகளையும், பசுமையான செடிகளையும் அங்கு நட்டோம். இது அங்கு வாழ்ந்த மக்களுக்கு சுகாதாரமான மன நிலையைக் கொடுத்தது. அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பார்க்கின்ற விதத்தையும் உயர்த்தியது.

அமெரிக்காவிலுள்ள ஒரு புகழ் பெற்ற கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர், “ பசுமையான சூழல், சுகாதாரமான மன நிலையைக் கொடுக்கும், சிறப்பாக, பின்தங்கிய சமுதாயங்களில் வாழும் மக்களுக்கு இது மிகவும் முக்கியமானது” என்று கூறினார்.

தேவன் தரும் அழகிய மீட்பைக்குறித்து ஏசாயா தீர்க்கதரிசி கண்ட தரிசனத்தின் மூலம், இஸ்ரவேலிலும் யூதாவிலும் உள்ள ஒடுக்கப் பட்ட மக்கள் புதிய நம்பிக்கையைக் கண்டடைந்தார்கள். அவர்களுடைய பேரழிவு மற்றும் ஏசாயா கூறிய நியாயத்தீர்ப்பு இவற்றின் மத்தியில், இந்த பிரகாசமான வாக்கு வேர் பிடிக்க ஆரம்பித்தது. “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப் போல செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்த களிப்புடன் பாடும் (ஏசா.35:1-2).

இன்று நம்முடைய சூழ்நிலைகள் எவ்வாறு இருப்பினும் சரி, நம்முடைய பரலோகத் தந்தை, நமக்கு புதிய நம்பிக்கையைத் தந்து, அவருடைய படைப்புகளின் மூலம் நம்மை மீட்டுக் கொள்ளும் அழகிய வழிகளில் நாம் மகிழ்ந்து களிகூருவோம். நாம் சோர்ந்து போகும் வேளைகளில், அவருடைய மகிமையையும், அவருடைய சிறப்புகளையும் தியானிக்கும் போது, நாம் உயர்த்தப் படுவோம். “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்” என்று ஏசாயா நம்மை உற்சாகப் படுத்துகின்றார் (வ.3).

ஒரு சில மலர்களால் நம்முடைய நம்பிக்கையை உயிர்ப்பிக்க முடியுமா? ஒரு தீர்க்கதரிசி ஆம் என்று பதிலளிக்கின்றார். அப்படியே நமக்கு நம்பிக்கையளிக்கும் தேவனும் கூறுகின்றார்.