ஆரம்ப கோடைகால வெப்ப நிலை, புத்துணர்ச்சி தருவதாக இருந்தது. பிரயாணத்தில் என்னோடு துணையாக வந்த என்னுடைய மனைவிக்கு இதைவிட நல்ல சூழ் நிலை இருக்க முடியாது. அந்த இனிய கணங்கள் சீக்கிரத்தில், சோகமாக மாறியிருக்கும், ஆனால் அதற்குள், நான் தவறான திசையில் செல்கிறேன் என்று எச்சரிக்கும் ஒரு சிவப்பு வெள்ளை எச்சரிப்புப் பலகையைப் பார்த்து விட்டேன். நான் சரியாக அனைத்துப்பக்கமும் திரும்பி பார்க்காததால், ஒரு கணம் என் முன்னே தோன்றிய “ நுழையாதே” என்ற அடையாளம், என்னுடைய முகத்திற்கு முன்பாக வந்து நின்றது. நான் உடனடியாக என்னுடைய தவறை சரிசெய்து கொண்டேன். நான் சரியான பாதையில் செல்லவில்லை என்ற எச்சரிக்கையை கவனிக்காமல் இருந்திருந்தால், நான் என்னுடைய மனைவிக்கும், எனக்கும் மற்றும் என்னோடு சேர்ந்தவர்களுக்கும் ஆபத்தை வருவித்திருப்பேன் என்பதை நினைத்து நடுங்கினேன்.
யாக்கோபின் முடிவு வார்த்தைகள், திருத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. நாம் சென்று கொண்டிருக்கும் பாதை அல்லது செயல், தீர்மானம் அல்லது முடிவு தீமையை விளைவிக்கலாம் என்பதை, நம்மீது அக்கரை கொண்டவர்கள் அறிந்து, “மீண்டும் நல்வழி”க்கு கொண்டுவர நம்மில் யாருக்கு தேவையில்லாதிருக்கின்றது? யாரோ ஒருவர் சரியான நேரத்தில், தைரியமாக நம் காரியங்களில் குறுக்கிடவில்லை யெனின், நமக்கும் மற்றவருக்கும் என்னென்ன தீமை நடந்திருக்கும் என்பதை யார் அறிந்திருக்கக் கூடும்?
அன்போடு கூடிய திருத்துதலை யாக்கோபு வலியுறுத்துகின்றார், “தப்பிப் போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன், ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்” (5:20) என்கின்ற வார்த்தைகளால் விளக்குகின்றார். திருத்துதல் என்பது தேவனுடைய கிருபையின் வெளிப்பாடு. நாம் மற்றவர்கள் நலனின் மீது கொண்டுள்ள அன்பும் கரிசனையும், அவர்களோடு பேசவும், அவர்களின் பாதையில் குறுக்கிடவும் நம்மைத் தூண்டுவதன் மூலம், “அவர்களை மீண்டும் திருப்பி கொண்டு வருவதற்கு” தேவன் நம்மைப் பயன் படுத்துவாராக (வ.19).
வழிதப்பிப் போன ஒருவர், தன்னுடைய சொந்த இடத்தைச் சென்றடைவதற்கு உதவும் போதுள்ள ஆபத்துக்கள் அல்லது நற்பலன்கள் யாவை? ஒரு மோசமான இடத்தில் இருந்த உன்னை மீட்டுக் கொண்டுவர எப்பொழுதாகிலும், யாரையாகிலும் தேவன் பயன்படுத்தினாரா?
பிதாவே, நான் உம்முடைய உண்மையை விட்டு விலகாதபடி என்னைக் காத்தருளும். அலைந்து திரிகின்ற மற்றவர்களையும் திருப்பிக் கொண்டு வரக்கூடிய தைரியத்தை எனக்குத் தந்தருளும்.