ராஜ பரம்பரையில் முடிசூட்டப்படுவதற்கு தயாராக இருக்கும் ஒருவரைக் குறித்து பொதுமக்கள் அதிகமாக அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பர். மற்றவர்களை மறந்துவிடுவர். பிரிட்டன் அரச குடும்பத்தின் வரிசையில், கிட்டத்தட்ட அறுபது பேர் அரியணையில் ஏறினர். அவர்களில் ஒருவரான ஃப்ரெட்ரிக் வின்சர், அந்த வரிசையில் நாற்பத்தொன்பதாவது இடத்தில் வந்தார். அவர் தன்னைப் பொது மக்களின் பார்வைக்கு காண்பிப்பதை தவிர்த்து, தன்னுடைய வாழ்க்கை முறையை முழுமையாகத் தொடர்ந்தார், அவர் பொருளாதார நிபுணராகப் பணிபுரிந்தார். “பணிபுரியும் ராஜபரம்பரையினராக” அவரை- அரச பரம்பரையிலுள்ள முக்கியமான நபரான அவருக்கு, அக்குடும்பத்தில் அங்கம் வகிப்பதற்கான சம்பளத்தை வழங்கவில்லை.
தாவீதின் மகனான நாத்தான் (2 சாமு.5:14) அரச குடும்பத்தைச் சேர்ந்தவன், ஆயினும் மக்களின் பார்வைக்கு வெளியே இருந்தான். அவனைக் குறித்து சிறிதளவே கூறப்பட்டள்ளது. ஆனால், மத்தேயு சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில், தாவீதின் மகனான சாலமோன் (யோசேப்பின் வம்சத்தில், மத்.1:6) குறிப்பிடப்பட்டுள்ளார். லூக்காவில் குறிப்பிடப்பட்டுள்ள வம்ச வரலாறு மரியாளின் வம்சத்தைக் குறிக்கின்றது, அதில் நாத்தானின் பெயர் வருகின்றது (லூக். 3:31). நாத்தான் அரச செங்கோலைப் பிடிக்கவில்லையெனினும், நிலையான தேவனுடைய இராஜியத்தில் ஒரு பங்கினைப் பெறுகின்றான்.
கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாமும் ராஜரீகத்தைப் பெறுகின்றோம். அப்போஸ்தலனாகிய யோவான், “தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவா.1:12) என எழுதுகின்றார். நாம் அனைவராலும் கவனிக்கப் படுகின்றவர்களாக இல்லையெனினும், நாம் தேவனுடைய பிள்ளைகள்! நாம் தேவனை பிரதிபலிக்கின்றவர்களாக இவ்வுலகில் வாழும்படி தேவன் நம்மை வைத்துள்ளார். ஒரு நாள் நாம் அவரோடு கூட அரசாளுவோம் (2 தீமோ.2:11-13). நாத்தானைப் போன்று நாமும் உலகை ஆளும் கிரீடத்தை பெறாமலிருக்கலாம், ஆனால் நாம் தேவனுடைய ராஜியத்தில் அவரோடு கூட ஆளுகை செய்யும் பங்கினைப் பெறுவோம்.
நீ ராஜ பரம்பரையினன், தேவனுடைய பிள்ளை என்பதை அறிந்துகொண்டது உனக்குள் என்ன உணர்வைக் கொண்டு வருகின்றது? ராஜாவின் பிள்ளையாகிய நீ, உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குச் செய்யும்படி என்னென்ன கடமைகளைக் கொண்டுள்ளாய்?
பரலோகத் தந்தையே, நீர் என்னை உம்முடைய குடும்பத்தில், நிரந்தர அங்கத்தினராகச் சேர்த்ததால், உமக்கு நன்றியுள்ளவளாக இருக்கின்றேன்.