சிறைச்சாலைக் கைதிகள் அநேகம் பேர், தங்களுடைய சிறைத் தண்டனை நாட்களைக் குறைப்பதற்காக, சாலையோரங்களில் கிடக்கும் குப்பைகளைப் பொறுக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தனர். அந்நேரம் அவர்களின் மேற்பார்வையாளர் ஜேம்ஸ் நிலைகுலைந்து கீழேவிழுந்தார். கைதிகள் அவருக்கு உதவும்படி ஓடினர், அவருக்கு அவசரமான மருத்துவ உதவி வேண்டும் என்று உணர்ந்தனர். ஒரு கைதி ஜேம்ஸின் அலைபேசியை எடுத்து, உதவி கேட்டு பேசினார். அவர்களுடைய மேற்பார்வையாளருக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கும்படி செய்தற்காக, காவல்துறையினர், அந்தக் கைதிகளுக்கு நன்றி கூறினர், ஏனெனில், அவருக்கு ஏற்பட்டுள்ள அந்த இருதய நோயில், அவர் சாகட்டும் என்று அவரை நிராகரித்திருக்கலாம், அல்லது அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவர்கள் தப்பித்திருக்கலாம்.
அந்தக் கைதிகளின் இரக்கச் செயல், பவுல் சீலா என்பவர்கள் சிறைச் சாலையில் இருந்தபோது நடைபெற்ற காரியத்தைப் போல் உள்ளது. அவர்களின் உடைகளைக் களைந்து, அடித்து, சிறைச்சாலையில் தள்ளிய பின்னர், ஒரு பூமியதிர்ச்சி மிகவும் வன்மையாகத் தாக்கி, அவர்களின் சங்கிலிகளைத் தளர்த்தி, சிறைச்சாலை கதவுகளைத் திறந்தது (அப்.16:23-26). சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்த போது, கட்டில் இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று எண்ணி, தன்னுடைய வாழ்வை முடித்துக் கொள்ளத் தயாரானான். (சிறைக் கைதிகள் தப்பித்துவிட்டால், அவனுக்குக் கிடைக்கும் கொடிய தண்டனையை அவன் அறிந்திருந்தபடியால்) அப்பொழுது பவுல், “நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்” என்று கத்தினான் (வ.28). அவர்களின் இச்செயலால், அந்த சிறைச்சாலைக்காரன் அசைக்கப் பட்டான். சிறைச்சாலையில் இத்தகைய ஒரு காரியத்தை அவர்கள் கேட்டதே இல்லை. எனவே அவன், அவர்கள் ஆராதிக்கும் தேவனைக் குறித்து அறிய ஆவலானான், அவனும் தேவனை விசுவாசித்தான் (வ.29-34).
நாம் பிறரை நடத்தும் விதம், நம்முடைய நம்பிக்கையையும் நாம் பெற்றுள்ள மதிப்பீடுகளையும் வெளிப்படுத்தும். பிறரைக் காயப் படுத்துவதற்குப் பதிலாக, நன்மை செய்ய நாம் தெரிந்து கொள்ளும் போது, நம்முடைய செயலைப் பார்க்கும் மற்றவர்களை, நாம் ஆராதிக்கும் தேவனைப் பற்றியும் அவருடைய அன்பினைப் பற்றியும் அதிசயிக்கும் படி, அவர்களைத் தூண்டும்.
எந்த சூழ்நிலையில், நீ சுய லாபமற்ற முறையில் செயல்படுவதைத் தெரிந்து கொண்டாய்? நீ எடுத்துக் கொண்ட முடிவு யாருக்கேனும் லாபமாக அமைந்ததா?
அன்புள்ள தேவனே, மற்றவர்களை உம்மிடம் இழுக்கும் காரியங்களைச் செய்யும்படி, நான் தெரிந்து கொள்ள எனக்கு உதவியருளும்.