“இடது புறம் அமர்ந்திருப்பவர்களெல்லாரும், என்னோடு சேர்ந்து மூன்று முன்னோக்கிய தள்ளு விசையைக் கொடுக்கவும்!” என்று எங்களுடைய படகு வழிகாட்டி கத்தினான். இடது பக்கம் இருப்பவர்கள் உள்ளே மூழ்கி, நமது படகை சுழல் நீரோட்டத்திலிருந்து வெளியே இழுக்கவும். பல மணி நேரம், நாங்கள் எங்கள் வழிகாட்டியின் அறிவுரைக்குச் செவிசாய்க்க கற்றுக் கொண்டோம். கொந்தளிக்கும் ஆற்றினைப் பாதுகாப்பாக கடந்து செல்ல, எங்களுக்கிருந்த கொஞ்ச அநுபவத்தோடு, ஆறு பேரும் சேர்ந்து எப்படி தண்டு வலிக்க வேண்டுமென, அவனுடைய தளராத குரல் எங்களுக்கு உதவியது.

வாழ்க்கையிலும் இத்தகைய போராட்டங்கள் உண்டு அல்லவா? சில வேலைகளில்  நமது படகு அமைதலாகப் போய் கொண்டிருக்கும். நொடிப்பொழுதில், வரும் ஆபத்தைத் தவிர்க்க, மிக வேகமாக துடுப்பு வலிக்க ஆரம்பித்து விடுவோம். அத்தகைய பிரச்சனை நேரங்களில், நமக்கு ஒரு திறமையான வழிகாட்டி வேண்டும் என உணருவோம், ஒரு நம்பிக்கைக்குரிய குரல், நம்மை சுழல் ஓட்டங்களில் இருந்து வெளியே கொண்டு வர உதவ வேண்டுமென நாம் விரும்புவோம்.

சங்கீதம் 32 ல் தேவன் அத்தகைய குரலாக இருப்பதாக வாக்களிக்கின்றார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்” (வ.8) என்கின்றார். இதற்கு சற்று முன்பு,  பாவத்தை உமக்கு அறிவித்தேன் (வ.5) என்றும், உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான் (வ.6) என்றும் காண்கின்றோம், அப்படியானால், அவர் கூறுவதைக் கேட்கின்ற பங்கினையும் செய்ய வேண்டும். “உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (வ.8) என்று அவருடைய அன்பினால் வெளிப்படும் வழி நடத்துதலை நமக்கு  நினைப்பூட்டுகின்றார். கடைசியாக சங்கீதக்காரன், “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்” (வ.10) என்கின்றார். நாமும் தேவனை நம்பி, நம்முடைய வாழ்வின் கடினமான பாதையில் நமக்கு வழிகாட்ட அவருடைய வாக்கின் மேல் பற்றுதலோடு, அவர் மீது அமைந்திருப்போம்.