பிரீத்தி தன்னுடைய 11 மாத குழந்தை லில்லியோடும், லில்லியின் ஆக்ஸிஜன் கருவியோடும் விமானத்தினுள்ளே, நடுப் பாதையில் சென்று கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய குழந்தையின் நுரையீரல் சம்மந்தமான நோய்க்கு மருத்துவ சிகிச்சையளிக்க சென்று கொண்டிருந்தனர். அவள் தனது இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்தில், விமான பணியாளர் பிரீத்தியை அணுகி, முதல் வகுப்பில் இருக்கும் ஒரு பிரயாணி, தன்னுடைய இருக்கையை அவளுடைய இருக்கைக்கு மாற்றிக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். நன்றியறிதலோடு, கண்ணீர் முகத்தில் வழிய, பிரீத்தி இன்னும் அதிக வசதிகள் கொண்ட ஒரு இருக்கைக்கு நடந்து சென்றாள், அவளுக்கு உதவிசெய்த அந்த அந்நியன் அவளுடைய இருக்கைக்கு வந்தான்.
தீமோத்தேயுவுக்கு, பவுல் எழுதின கடிதத்தில், பவுல் குறிப்பிட்டுள்ள தாராள குணத்தை பிரீத்திக்கு உதவியவர் காட்டினார். தீமோத்தேயுவின் பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு பவுல், “நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்” (1 தீமோ.6:18) கட்டளையிடு என்று எழுதுகின்றார். நீங்கள் கடுமையானவர்களும், உங்கள் நம்பிக்கையை இவ்வுலகத்தின் செல்வத்தின் மேல் வைப்பவர்களுமாக இருங்கள் என்று பவுல் கூறமாட்டாரா என்பது எதிர்பார்ப்பு. ஆனால், அவரோ தாராள குணமுடைய ஒரு வாழ்வையும், பிறருக்குப் பணிசெய்வதையுமே முக்கியப் படுத்துகின்றார். கெல்சி விமானத்தின், 2டி இருக்கையிலிருந்த அந்த மனிதனைப் போன்று, நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாயிருங்கள் என்கின்றார்.
நாம் மிக செழிப்பாக இருக்கின்றோமா அல்லது தேவையில் இருக்கின்றோமா என்பதல்ல, நாம் நம்மிடம் உள்ளவற்றை, மற்றவர்களோடு தாராளமாகப் பகிர்ந்து கொள்வதில் ஐசுவரியவானாக இருக்கின்றோமா என்பதே முக்கியம். நாம் அப்படி செய்யும் போது, பவுல் சொல்வதைப் போன்று, நாமும், “நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளும்படி” (வ.19) செயல்படுகின்றவர்களாக இருப்போம்.
தேவனே, நான் உம்மீதுள்ள நம்பிக்கையைப் புதிப்பித்துக் கொள்கின்றேன், எனக்கு தாராளமனதையுடைய ஆவியைத் தந்தருளும்.