லீலா புற்று நோயால் பாதிக்கப் பட்டு, மரித்துக் கொண்டிருந்தாள். ஓர் அன்பான தேவன், ஏன் தன்னுடைய மனைவி இத்தனை கஷ்டங்களையும் அநுபவிக்கும்படி விட்டார் என்பதை அவளுடைய கணவன் தீமோத்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் வேதாகம ஆசிரியையாக இருந்து கிறிஸ்துவுக்காக உண்மையாய் பணிபுரிந்தாள், அநேகரை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினாள். “நீர் ஏன் இதனை அனுமதித்தீர்?” என்று கதறினான். ஆனாலும், தீமோத்தி தேவனோடு கூட நடப்பதில் உண்மையாய் இருந்தான்.

“அப்படியானால் ஏன் நீ இன்னமும் தேவன் மீது நம்பிக்கையோடு இருக்கின்றாய்?”, “அவரை விட்டுத் திரும்பாமல் இருக்க காரணம் என்ன?” என்று நான் அவனிடம் கேட்டேன்.

“ஏனெனில் இதற்கு முன்பு நடந்தவற்றிற்காக” என்று திமோத்தி பதிலளித்தான். இப்பொழுது நான் தேவனைக் “காண” முடியவில்லை, ஆனால், தேவன் அவனைப் பாதுகாத்து, உதவி செய்த நாட்களை அவன் நினைத்துப் பார்த்தான். இன்னமும் தேவன் அவனுடைய குடும்பத்தைப் பாதுகாத்து வருகின்றார் என்பதற்கு இவை அடையாளம், “நான் நம்பியிருக்கின்ற தேவன், அவர் குறித்த நேரத்தில் வருவார்” என்றான்.

திமோத்தியின் வார்த்தைகள், ஏசாயா 8:17 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி,  விசுவாசத்தைக் குறித்து ஏசாயாவின் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றது. அவனுடைய ஜனங்கள், எதிரிகளால் வரும் துன்பத்தை எதிர் நோக்கியிருந்த போது, அவனால் தேவனுடைய பிரசன்னத்தை உணர முடியவில்லை, எனினும் அவன் “நானோ கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்” என்கின்றார், ஏனெனில், தேவனுடைய பிரசன்னம் அவர்களோடு இருக்கும் என்ற அடையாளத்தை அவர் கொடுத்தபடியால், அவன் தேவன் மேல் நம்பிக்கையோடு  இருந்தான் (வ.18).

சில வேளைகளில் நம்முடைய துன்பங்களின் மத்தியில் தேவன் இல்லையோ என்று நாம் எண்ணும்படியான சந்தர்ப்பங்கள் நேரலாம்.  அப்படிப்பட்ட நேரங்களில், நம்முடைய வாழ்வில், கடந்த நாட்களிலும், தற்சமயமும் அவர் செய்த காரியங்களை நினைத்துப் பார்ப்போம். இவையே, நம்மால் காணக்கூடாத தேவன் செய்த, காணக்கூடிய நினைப்பூட்டிகள். அவர் எப்போதும் நம்மோடிருக்கும் தேவன், அவர் தான் தீர்மானித்திருக்கின்ற நேரத்தில், அவருடைய வழியில் பதிலளிப்பார்.