என்னுடைய போதகர், எங்கள் வகுப்பில் இயேசுவின் வாழ்வைப் பற்றி ஒரு கடினமான கேள்வியைக் கேட்ட போது, நான் கரத்தை உயர்த்தினேன். நான் இந்தக் கதையை வாசித்திருக்கின்றேன், எனவே, அதனை நான் அறிவேன். மேலும் அந்த அறையிலிருந்த யாவரும், நான் அதை அறிவேன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் விரும்பினேன். நான் வேதத்தைப் போதிப்பவன். நான் இவர்களுக்கு முன்பாக தெரியாதவனாய் குறுகிப் போவேனேயானால், அது எத்தனை வெட்கத்துக்கு உரிய செயல்! ஆனால் இப்பொழுது, நான் என்னுடைய நிலையை எண்ணி மன உளைச்சலுக்கு உள்ளாகி, பயத்தால் இழுக்கப் பட்டேன். எனவே நான் எனது கையை கீழே இறக்கினேன். நான் இத்தனை நிலையற்றவனா?

யோவான் ஸ்நானகன் மற்றுமொரு சிறந்த வழியைக் காட்டுகின்றார்.  அநேக மக்கள் அவனை விட்டுப் பிரிந்து, இயேசுவைப் பின்பற்றுகின்றனர் என்று அவனுடைய சீஷர்கள் அவனிடம் குறை கூறுகின்றனர். அதற்கு யோவான், “நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப் பட்டவன் அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” (வச. 28-30) என்றான். தான் இவ்வுலகில் வந்ததின் நோக்கமே இயேசு தான் என்பதை யோவான் உணர்ந்தான். அவர், “உன்னதத்திலிருந்து வருகிறவர், எல்லாரிலும் மேலானவர்” (வச. 31), தேவக் குமாரன், நமக்காக தன் ஜீவனையே தந்தவர், அவருக்கே எல்லா புகழும், மகிமையும் உண்டாகக் கடவது.

நம்முடைய கவனம் நம்மிலேயே இருக்கும் போது, நாம் தேவனை விட்டு விலகுகின்றோம். அவரே நம்மை இரட்சித்தார், இவ்வுலகின் ஒரே நம்பிக்கையும் அவரே, எந்த மகிமையையும் நாம் அவரிடமிருந்து திருடிக் கொள்வோமேயானால், நாம் அவரை காயப்படுத்துகின்றோம்.

நாம் இத்தகைய காரியங்களிலிருந்து விலகி நிற்க தீர்மானிப்போம். அதுவே தேவனுக்கும், நமக்கும், இவ்வுலகிற்கும், உகந்தது.