“உயிரோடு இருப்பவர்களில் மிகவும் தைரியமானவர்” என்று டெஸ்மாண்ட் அழைக்கப் பட்டார். ஆனால் மற்றவர்கள் எதிர்பார்ப்பதைப் போன்று அவர் இருந்ததில்லை. அவர் துப்பாக்கியை கையில் ஏந்த மறுத்த ஓர் இராணுவ வீரர். மருத்துவத் துறையைச் சார்ந்த அவர், தனிமனிதனாக, ஒரு யுத்தத்தின் போது, எழுபத்தைந்து காயமடைந்த வீரர்களை பதுகாப்பாக மீட்டார், அதில், அவரைக் கோழை என அழைத்தவர்களும், அவருடைய நம்பிக்கையை ஏளனம் செய்தவர்களும் அடங்குவர். இந்த வீரர், அதிகமான துப்பாக்கிச் சூடு நடைபெறும் பகுதியினுள் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே ஓடி, “தேவனே, இன்னும் ஒருவரைக் காப்பாற்ற உதவியருளும்” என்றார். அவருடைய வீரத்தைப் பாராட்டி, அவருக்கு கெளரவ பதக்கம் வழங்கப்பட்டது.
இயேசுவை அநேகர் புரிந்து கொள்ளவில்லை என வேதாகமம் கூறுகின்றது. சகரியா முன்னுரைத்தபடி (9:9) ஒரு நாளில், இயேசு எருசலேம் நகரத்திற்கு கழுதையின் மீது ஏறி, செல்கின்றார், மக்கள் கூட்டம் மரக் கிளைகளை அசைத்து, “ஓசன்னா!” (“இரட்சிப்பு” என்று அர்த்தம் கொள்ளும் ஆராதிக்கும் ஒரு வார்த்தை) என்று ஆர்ப்பரிக்கின்றது. சங்கீதம் 118:26ல் கூறப்பட்டுள்ள படி, அவர்கள், “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” என்று ஆர்ப்பரித்தார்கள் (யோவா.12:13). இந்தச் சங்கீதத்தின் அடுத்த வசனம் பலியைக் கொண்டுவருதலைக் குறிக்கின்றது (சங். 118:27). யோவான் 12ல் குறிப்பிட்டிருந்த கூட்டம், அவர்களை ரோமர்களிடமிருந்து விடுவிக்கும் ஒரு புவியாளும் மன்னனை எதிர்பார்த்தது, ஆனால் இயேசுவோ அதற்கும் மேலானவர், அவர் ராஜாதி ராஜா, நமக்காக பலியாக வந்தவர், தேவன் மாம்சத்தில் வந்தார், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக, மனப்பூர்வமாக சிலுவையை ஏற்றுக் கொண்டார், அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பாக தீர்க்க தரிசனமாக உரைக்கப்பட்டதை நிறைவேற்றினார்.
“இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை” என யோவான் எழுதுகின்றார். ஆனால் பின்பு, “இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும்……நினைவுகூர் ந்தார்கள்” (யோவா.12:16). அவருடைய வார்த்தையின் வெளிச்சத்திலே தேவனுடைய நித்திய நோக்கம் அவர்களுக்குத் தெளிவானது. நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பும் அளவுக்கு, அவர் நம்மை நேசிக்கின்றார்!
இயேசு உன்னை எவ்வாறு இரட்சித்தார்? அவருக்கு நன்றி துதியை எவ்வாறு செலுத்தப் போகின்றாய்?
உயிர்த்தெழுந்த இரட்சகரே, நீர் எங்களுக்காக சிலுவையில் செலுத்தின தியாகத்திற்காக உம்மைப் போற்றுகின்றேன், என்னுடைய நித்திய ராஜாவைப் போற்றி, அவருக்குப் பணிசெய்து வாழ எனக்கு உதவியருளும்.