பேச்சுக் குறைவைத் திருத்தும் பயிற்சியாளராக வேண்டுமென திட்டமிட்ட ஜேன், அதற்கான கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தாள். அவள் சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்படகூடியவள் என்பதால், பயிலும் போதுள்ள செயல்முறை பயிற்சியின் போது, தான் அந்த வேலைக்குப் பொருத்தமில்லாதவள் என்பதாக உணர்ந்தாள். பின்னர், அவள் ஒரு பத்திரிக்கைக்கு எழுதும் வாய்ப்பைப் பெற்றாள். அவள் தன்னை ஒரு எழுத்தாளராக நினைத்துப் பார்த்ததேயில்லை. ஆனால் அநேக ஆண்டுகளுக்குப் பின்னர், அவள் தேவையிலிருக்கும் குடும்பங்களுக்கு ஆலோசனைகளை எழுதுபவராக மாறினார். “என்னுடைய வாழ்வை நான் பின்னோக்கிப் பார்க்கும் போது, என்னுடைய திட்டத்தை தேவன் ஏன் மாற்றினார் என்பதைக் காணமுடிகிறது, அவர் எனக்கென்று ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கின்றார்” என்றாள்.

தடைசெய்யப்பட்ட திட்டங்களைக்குறிப்பிடும் அநேக நிகழ்வுகளை வேதாகமத்தில், நாம் காணலாம். பவுலின் இரண்டாவது மிஷனரி பயணத்தின் போது, அவர் பித்தினியா நாட்டிற்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல பிரயாசம் எடுத்தார், ஆனால் ஆவியானவரோ அவரை அங்கு போகத் தடை பண்ணினார் (அப். 16:6-7). இது நம்மை நிச்சயமாக திகைக்கச் செய்யும், ஏனெனில், தேவன் தந்த ஊழியத்தினிமித்தம் செய்யும் திட்டங்களை, ஏன் இயேசுவானவர் தடைசெய்ய வேண்டும்? அதற்கான பதிலை அவர் கனவில் பெற்றார், மக்கெதோனியாவினருக்கு அவருடைய உதவி மிகவும் தேவையாயிருந்தது. ஐரோப்பாவின் முதல் சபையை, பவுல் அங்கு தான் நிறுவினார். சாலமோன் இதனையே, “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்” என்று கூறியுள்ளார் (நீதி. 19:21). 

நாம் நமக்குத் திட்டங்களை வகுத்துக் கொள்வது புத்திசாலித்தனம் தான். “திட்டமிடத் தவறு;  தவறுவதற்கு திட்டமிடுகின்றாய்” என்பது ஒரு பழமொழி. தேவன் தம்முடைய திட்டங்களை நம்மில் நிறைவேற்றும் படி, நம்முடைய திட்டங்களைத் தடை செய்யலாம். தேவன் மீது நம்பிக்கையுள்ள நாம், அவருடைய வார்த்தைகளை கவனித்து, அதற்குக் கீழ்படிய வேண்டும். அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, நம்முடைய வாழ்வில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுபவர்களாவோம்.

நாம் நம்முடைய திட்டங்களைத் தொடரும் போது, அதில் ஒரு புதிய திருப்பத்தையும் சேர்த்துக் கொள்வோம், கவனிப்பதற்குத் திட்டமிடுவோம், தேவனுடைய திட்டத்தைக் கவனிப்போம்.