தற்கால, தொழில் நுட்பத் துறையானது, நம்முடைய கவனத்தை தொடர்ச்சியாக ஈர்க்கிறது. அதிலும் நவீன “வலைதள” அணுகுமுறை, வியத்தகு முறையில் மொத்த மனிதகுலத்தின் அறிவையும் ஒன்று சேர்ந்து, நமது உள்ளங்கைக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த அறிவை தொடர்ச்சியாகப் பெற சிலருக்கு, நாம் கிரயம் செலுத்த வேண்டியுள்ளது.
வெளியுலகத்தில் என்ன நடக்கிறது? நாம் எதையும் கவனிக்காமல் விட்டு விட்டோமா என்ற உந்துதல் நமக்குள்ளே ஏற்படுவதைக் குறிப்பிட, எழுத்தாளர் லிண்டா ஸ்டோன் என்பவர், “தொடர்ச்சியான பகுதி கவனம்” என்ற சொற்டொடரை பயன்படுத்தினார். அப்படியானால், அது நாளடைவில் தீராத பதட்டத்தை ஏற்படுத்தும் என்று கூறுவோமேயானால், அது சரியே!
அப்போஸ்தலனாகிய பவுல் வெவ்வேறு காரணங்களின் நிமித்தம் ஏற்பட்ட கவலையோடு போராடிக்கொண்டிருந்தாலும், நம்முடைய ஆத்துமா தேவன் தரும் சமாதானத்தைப் பெற ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறதை அவர் அறிவார். இதையே பவுல், துன்பங்களைச் சகித்துக் கொண்டிருக்கிற, தெசலோனிக்கேயா சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார் (1 தெச. 2:14). எனவே, பவுல் தேவனுடைய விசுவாசிகளை, “எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்; எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்” (5:16-18) என்று தேற்றுகின்றார்.
“தொடர்ந்து ஜெபிப்பது” என்பது நம்மைச் சோர்வடையச் செய்வதாகத் தோன்றலாம், ஆனால் நாம் எத்தனை முறை நம்முடைய அலைபேசியை பயன்படுத்துகின்றோம்? இந்த உந்துதலை, ஏன் நாம் தேவனோடு பேசுவதற்கு பயன்படுத்தக்கூடாது?
நம்முடைய தேவைகளையே சந்திப்பதற்குப் பதிலாக, தொடர்ந்து தேவனுடைய சமுகத்தில் அமைதியாக ஜெபத்தில் தரித்திருப்பதை நாம் தேர்ந்து கொள்வது எத்தனை முக்கியமானது. நம்முடைய அனுதின வாழ்வில், கிறிஸ்துவின் ஆவியானவரைச் சார்ந்து கொண்டு, நம் பரலோகத் தந்தைக்கு நம்முடைய முழு கவனத்தையும் கொடுப்பதற்குக் கற்றுக்கொள்வோம்.
நவீன தொழில் நுட்பம், உன்னுடைய விசுவாசத்தை வளர்த்துக் கொள்ள உதவுகின்றதா அல்லது விசுவாசத்திற்குத் தடையாக உள்ளதா? தேவன் மீது தொடர்ந்து உன்னுடைய கவனத்தை வளர்த்துக்கொள்ள எது உதவியாயிருக்கின்றது?
அப்பா, உம்மோடு நான் எப்பொழுதும் தொடர்பு கொள்ளும்படி என்னை அழைப்பதற்காகவும், நான் உம்மோடு தொடர்ந்து பேசுவதைக் கேட்பதற்கு நீர் ஆவலாயிருப்பதற்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றேன்.