“தோல்வி என்பதே இல்லை” என்றார், சூசன் பி. அன்டொனி (1820-1906). அவள், அமெரிக்காவில் பெண்கள் உரிமைக்காக, அசைக்க முடியாத உறுதியோடு போராடினவள் அவள் வன்மையான விமர்சனங்களையும், பின்னர், கைது, விசாரணை, சட்ட விரோதமாக வாக்களித்ததால் குற்றவாளி என்ற தீர்ப்பு என பலவிதமான பிரச்சனைகளைச் சந்தித்தாள். ஆனாலும் அன்டொனி, பெண்கள் ஓட்டுரிமையை பெறும் வரை போராடுவதெனத்  தீர்மானித்தாள். அவளுடைய போராட்டத்தின் நோக்கம் நேர்மையானது எனக் கருதினாள். அவளுடைய போராட்டத்தின் விளைவை, காண்பதற்கு அவள் உயிரோடு இல்லாவிட்டாலும், அவளுடைய அறிக்கை உண்மையென நிரூபிக்கப் பட்டது. 1920ல், அரசியல் அமைப்பின் பத்தொன்பதாவது சட்ட திருத்தம், பெண்களுக்கு ஓட்டுரிமையை வழங்கியது.

தோல்வியென்பது, நெகேமியாவின் செயல்களிலும் இல்லை, ஏனெனில், வல்லமையான உதவியாளராக தேவன் அவரோடிருந்தார். அவருடைய நோக்கத்தை ஆசிர்வதிக்கும் படி தேவனிடம் கேட்ட பின்பு, அவர் எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்ட ஆரம்பிக்கின்றார். நெகேமியாவும், அவரோடு, பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து, எருசலேமுக்குத் திரும்பிய சிலரும் சேர்ந்து இந்த வேலையை முடித்தனர். பகைவரிடமிருந்து மக்களைக் காப்பாற்ற அலங்கம் தேவைப்பட்டது. ஏமாற்றுதல், அச்சுறுத்தல் மூலமாக, அவருடைய நோக்கத்திற்கு எதிர்ப்புகள் வந்தன. ஆனால் எந்த எதிர்ப்பும், அவருடைய வேலையைத் தடுக்க முடியவில்லை. தன்னை தடுக்க எண்ணியவர்களுக்கு, “நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது” என்று சொல்லி அனுப்பினான் (நெகே. 6:3). பின்பு அவன், “தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்” என்று ஜெபித்தான் (வச. 9). அவனுடைய விடாமுயற்சியினால் அந்த வேலையை முடிக்க முடிந்தது (வச. 15).

நெகேமியாவை தேவன் பெலப்படுத்தி, எதிர்ப்புகளை மேற்கொள்ளச் செய்தார். நீ எடுத்துக் கொண்ட எந்தவொரு வேலையை விட்டு விட நினைக்கின்றாய்? அதனைத் தொடர்ந்து செய்வதற்குத் தேவையானவற்றை தேவனிடம் கேள்.