அது கிறிஸ்மஸுக்கு முந்திய நாட்கள், அவளுடைய குழந்தைகளின் இருதயத்தில் நன்றியறிதலை உருவாக்குவது, கடினமாயிருந்தது. அவளுடைய குழந்தைகளின் சிந்தனையில் அதனை எவ்வாறு எளிதாக கொண்டு வருவது என்பதனையும், அவர்களின் இருதயத்தில் அதனை எவ்வாறு ஆழமாகப் பதியச் செய்வது என்பதையும் அவள் திட்டமிட்டாள். அவள் தன்னுடைய வீட்டில் அநேக இடங்களில் சிவப்பு ரிப்பன்களைக் கட்டினாள், சுவிட்சுகள், அலமாரியின் கதவுகள், குளிர் சாதனப் பெட்டியின் கதவு, துவைக்கும் இயந்திரம், உலர்ப்பான், தண்ணீர் குழாய்கள், என பல இடங்களில் சிவப்பு ரிப்பன்களோடு, “தேவன் தந்துள்ள அநேக ஈவுகளை நாம் எளிதாக மறந்து விடுகிறோம், எனவே நான் அவற்றில் ஒரு ரிபன் கட்டியுள்ளேன், தேவன் நம் குடும்பத்தில் எத்தனை நல்லவராய் இருக்கிறார், அவரிடத்திலிருந்து வருகின்ற ஈவுகளை நாம் மறவாதிருப்போம்” என்ற குறிப்பையும் எழுதி வைத்தேன்.
உபாகமம் 6ஆம் அதிகாரத்தில் நாம் காண்கின்றோம், இஸ்ரவேலர்கள் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தை அடைவதற்கு முன்பாக அநேக இடங்களில் வெற்றி பெற வேண்டியிருந்தது. அவர்கள் கட்டாத வசதியான பெரிய பட்டணங்களில் பிரவேசிப்பார்கள், (வ.10) சகல நல்ல வஸ்துக்களால் நிரப்பப்பட்ட வீடுகளில் குடியேறுவார்கள், அவர்கள் வெட்டாத துரவுகளையும், நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும் அவர் உங்களுக்கு கொடுப்பார்,(வ.11) இத்தனை ஆசீர்வாதங்களையும் தருபவர் “உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே”(வ.10) இவை அத்தனையும், இன்னும் அநேக நன்மைகளையும் அன்போடு தேவன் தருகின்றார் எனவே மோசே ஜனங்களிடம்,” உன் கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” (வ.12) என்கின்றார்.
நம் வாழ்வின் சில காலங்களை, நாம் எளிதாக மறந்து விடுகின்றோம். ஆனால் நம்முடைய அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் காரணராகிய தேவனையும், அவருடைய நன்மைகளையும் நம் கண்கள் காணத் தவறக்கூடாது.
உன் வாழ்வில் பெற்றுள்ள ஐந்து ஆசீர்வாதங்களை எழுது. இந்த நன்மைகளுக்காக ஏன் நன்றி செலுத்தவேண்டும்? இவற்றிற்காக எப்படி தேவனுக்கு நன்றி செலுத்தப் போகின்றாய்?
அன்புள்ள தேவனே, நீரே எங்களுடைய வாழ்வில் பெற்றுள்ள அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் காரணர். எங்களுடைய பெருமையினால் நாங்கள் இதனை மறந்து விட்டோம். நீர் தந்த அனைத்து ஈவுகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றேன்.