கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், ரோமர்களுடைய சத்திரங்களில் விலங்கினங்களை வைத்துப் பாதுகாத்துக்கொள்ள, மதத் தலைவர்கள் விட மாட்டார்கள். இத்தகைய மோசமான நிலையிருந்ததால், பயணம் செய்யும் கிறிஸ்தவர்கள், மற்ற விசுவாசிகளுடனேயே தங்குவதற்கு முயற்சிப்பர்.
அந்த பிரயாணிகளிடையே, இயேசுவை மேசியா அல்ல என்று மறுத்த கள்ளப் போதகர்களும் இருந்தனர். எனவே தான், யோவான் எழுதிய இரண்டாம் நிருபத்தில், தன் வாசகர்களிடம், குறிப்பிட்ட சிலரை உங்கள் வீடுகளில் ஏற்றுக் கொள்ளாதிருங்கள் என்கிறார். யோவான் தன்னுடைய முதலாம் நிருபத்தில், இந்த கள்ளப் போதகர்களைக் குறித்து,” பிதாவையும், குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து” (1 யோவா. 2:22) என்கிறார். யோவானுடைய இரண்டாம் நிருபத்தில், இதனை இன்னும் விரிவாகச் சொல்கின்றார், “கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும், குமரனையும் உடையவன்” (வச. 9) என்கின்றார்.
“ஒருவன் உங்களிடத்தில் வந்து, இந்த உபதேசத்தைக் கொண்டு வராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும் இருங்கள்”(வச. 10) எனவும் எச்சரிக்கின்றார். தவறான உபதேசங்களை போதிப்பவர்களை, நீங்கள் உபசரித்தால், தேவனை விட்டு தூரம் போனவர்களுக்கு நீங்கள் உதவுபவர்களாவீர்கள்.
யோவானின் இரண்டாம் நிருபம், தேவனுடைய அன்பின் மற்றொரு பக்கத்தைக் காட்டுகின்றது. விரிந்த கரங்களோடு அனைவரையும் வரவேற்கும் ஒரு தேவனுக்கே நாம் பணி செய்கின்றோம். பொய்யான அன்பினால், தன்னையும், மற்றவர்களையும் ஏமாற்றுகின்றவர்களுக்கு உதவக் கூடாது. மனம் வருந்தி, தேவனிடம் திரும்பி வருபவர்களை அவர் தம் கரங்களால் அணைத்துக் கொள்வார். அவர், பொய்யரை அணைப்பவரல்ல.
மற்றவர்களோடு நீ கொண்டுள்ள உறவில், தேவனுடைய அன்பை எப்படி காண்பிக்கின்றாய்? உன்னுடைய சொந்த வாழ்வில், அல்லது பிறருடைய வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளை நீ சந்திக்க நேரிடும்?
அப்பா பிதாவே, நீர் உண்மையாய் எங்களை நேசிக்கின்றீர், உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எங்களுக்குத் தருகின்ற மாறாத கிருபையோடு, உம்முடைய அன்பை நாங்கள் மற்றவர்களுக்கு காண்பிக்க எங்களுக்கு உதவியருளும்.