எட்வர்ட் பேசன்(1783-1827) மிகவும் கடினமான வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய இளைய சகோதரனின் மரணம், அவரை மிகவும் ஆழமாகப் பாதித்தது. அவர், இருமுறை கோளாறினால் பாதிக்கப்பட்டார். அதனால், பல நாட்கள் தொடர்ந்து வரும் ஒற்றைத் தலை வலியினால் அவதியுற்றார். இதுவும் போதாதென்று, அவர் ஒரு குதிரையிலிருந்து தவறி விழுந்ததால், ஒரு கையை அசைக்க முடியாதபடி பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டார். மேலும், காச நோயினால் பாதிக்கப்பட்டு, சாவின் விளிம்பு வரை சென்றார்! ஆனாலும் அவர் விரக்தியோ, நம்பிக்கையின்மையோ கொள்ளவில்லை. அவருடைய நண்பர்கள், எட்வர்ட் மரிக்கும் வரை, அளவில்லாத மகிழ்ச்சியோடிருந்தார், என்றனர். அது எப்படி முடிந்தது?

ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு, அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கடிதத்தில், அவருடைய சூழ்நிலைகள் எவ்வாறிருந்த போதும், தேவனுடைய உண்மையான அன்பின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். அவர் தைரியமாகக் கேட்கிறார், “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோம. 8:31) தேவன் தம்முடைய சொந்த குமாரனாகிய இயேசுவையே நம்மை மீட்பதற்காகத் தந்தாரெனில், நாம் இந்த வாழ்வை நன்கு முடிப்பதற்குத் தேவையான அனைத்தையும் தருவது நிச்சயமல்லவா? பவுல் தன்னுடைய வாழ்வில் சந்தித்த ஏழு கடினமான சூழல்களைக் கூறுகின்றார். அவையாவன, உபத்திரவம், வியாகுலம், துன்பம், பசி,  நிர்வாணம், நாசமோசம், பட்டயம் என்பன (வச. 36). இந்த கெட்ட காரியங்களெல்லாம் நடைபெறாதபடி, இயேசுவின் அன்பு தடுத்துவிடும், என்பதாக அவர் கூறவில்லை. மாறாக, “இவை எல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” என்கிறார் (வச. 37).

நிலையில்லாத இவ்வுலகில், நாம் தேவனை முழுமையாக நம்பி வாழலாம். ஒன்றும், “நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்” (வச. 39).