சிறுவனும் கொட்டைகளும் என்ற, பழங்கால நீதிக் கதையில், ஒரு சிறு பையன் கொட்டைகள் வைக்கப்பட்டிருந்த ஜாடியினுள் கையைவிட்டு, கை நிறைய கொட்டைகளை அள்ளிக் கொண்டு, கையை வெளியே எடுக்க முயற்சிக்கிறான். கொட்டைகளோடு கையை வெளியே எடுக்க முடியவில்லை. தான் அள்ளிக் கொண்டதில், ஒன்றையும் விட தயாராக இல்லாத அச்சிறுவன் அழ ஆரம்பிக்கின்றான், சில கொட்டைகளை விட்டு விட்டு, கையை வெளியே எடுக்க ஆலோசனை கொடுக்கப்படுகிறது. பேராசை என்பது கடினமான எஜமானன்.

இந்தக் கதை தரும் நீதியை, பிரசங்கியின் ஞான ஆசிரியர் நமக்கும் கூறுகின்றார். அவர் சோம்பேறி, பேராசைக்காரன் ஆகிய இருவரின் ஒற்றுமை, வேற்றுமைகளைக் குறிப்பிடுகிறார். “மூடன் தன் கைகளைக் கட்டிக் கொண்டு, தன் சதையையே தின்கிறான். வருத்தத்தோடும், மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் கொண்டிருப்பதைப் பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.”(4:5-6). என்கின்றார். சோம்பேறி, தான் அழிந்து போகும் மட்டும் காரியங்களைத் தள்ளி போட்டுக் கொண்டேயிருப்பான், செல்வத்தைச் சேகரிப்பவனும், ஒரு நாள் , தன்னுடைய “பிரயாசம் யாவும் வீண், வருந்தத் தக்க வேலையை செய்தேனே “என்பான் (வச. 8)

பேராசையோடு பொருளைச் சேகரிக்க கஷ்டப்படுவதை விட்டு விட்டு, இருப்பதில் திருப்தியடைந்தவர்களாய் வாழ வேண்டும் என்பதே ஆசிரியரின் விருப்பம். நமக்கென்று தேவன் கொடுத்திருப்பது எப்பொழுதும் இருக்கும். இயேசு நமக்குச் சொல்வது,”மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?’ (மாற். 8:36)