1994 ஆம் வருடம் வெளியான “ஃபோரெஸ்ட் கம்ப்” என்ற துப்பறியும் திரைப்படத்தில் வரும், ஃபோரெஸ்ட் ஒட்டத்தின் மூலம் பிரபல்லமானார். அவர் சிறிய ஓட்டத்தைத் துவக்கினார், நாளடைவில் 3 வருடங்கள், 2 மாதங்கள், 14 நாட்கள், 16 மணி நேரம் தொடர்ந்து ”சாலையின் கடைசிவரை” ஓடி முடித்தார். ஒவ்வொரு முறையும் அவர் இலக்கினை அடையும் போது, மற்றொரு இலக்கினை நிர்ணயித்து, தொடர்ந்து ஓடுவார். அமெரிக்கா தேசத்தில் குறுக்கும், நெடுக்குமாக ஓடி, இதுவரை நினையாத அளவு ஓடினார். ‘ஏதோ செய்ய வேண்டும் “ என்பதாக ஆரம்பித்தது அந்த ஓட்டம். “அன்றைய தினம், எந்தவொரு நோக்கமும் இல்லாமல், ஒரு சிறிய தொலைவு ஓட ஆரம்பித்தேன் “ என்றார் ஃபோரெஸ்ட். 

எந்த நோக்கமும் இல்லாமல் ஓடிய ஃபோரெஸ்ட்டைப் போல்லல்லாமல், அப்போஸ்தலனாகிய பவுல் “பந்தயப் பொருளை பெற்றுக்கொள்ளத் தக்கதாக ஓடுங்கள்” (1 கொரி. 9:24) என்று வாசகர்களை, தன்னை மாதிரியாகப் பின் பற்றச் சொல்கின்றார். பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்களைப் போன்று ஓட்டத்தில், அதாவது வாழ்க்கையாகிய ஓட்டத்தில், நாமும் சில உலக சிற்றின்பங்களை வேண்டாம் என ஒதுக்கி விட வேண்டும். நம்முடைய உரிமைகளை விட்டுக் கொடுக்க நாம் முன் வரும் போது, அது, நாம் மற்றவர்களுக்கு பாவத்திலிருந்து மீட்பு, நித்திய வாழ்வு ஆகிய நற்செய்திகளை கொடுக்க உதவியாயிருக்கும்.

இந்த இலக்கை நோக்கி நம்மோடு ஓட , நாம் மற்றவர்களையும் அழைக்கும் படி நம் இருதயத்தையும், மனதையும் ஆயத்தப்படுத்தும் போது, நமக்கும் அந்த பந்தயப்பொருள் நிச்சயமாகக் கிடைக்கும். நாம் தேவனோடு, நித்திய காலமாக வாழுவோம். நம் ஓட்டத்தை முடிக்கும் போது, தேவன் நமக்கு வழங்கும் கிரீடம் என்றென்றும் அழியாதது. அவரை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு அவர் தரும் பெலத்தோடே நாம் ஓடும் போது, பந்தயப் பரிசை பெற்றுக்கொள்வோம். இது, ஓடுவதற்கு என்ன அருமையான காரணம் !