என்னுடைய உறவினளான, மூன்று வயது ஜென்னா வெளிப்படுத்தும் ஒரு காரியம் என் மனதை விட்டு அகல்வதேயில்லை. ஒரு வாழைப்பழ கிரீம் பை, டிராம்பொலின் விளையாட்டு அல்லது ஃப்ரிஸ்பீ விளையாட்டு, ஏதோ ஒன்றை அவள் மிகவும் நேசித்தால், அதை வெளிப்படுத்த “உலகளவுக்கு உன்னை நேசிக்கின்றேன்” என்று தன் கரங்களை விரித்து அசைத்து தெரிவிப்பாள்.
இந்த அளவுக்கு நான் எதையாகிலும் நேசித்திருக்கின்றேனா என்று நான் நினைத்துப் பார்த்ததுண்டு. அப்படி ஒன்றும் நினைவிலில்லை.
“தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவா. 4:8,16) என யோவான் திரும்பத் திரும்ப எழுதுகின்றான். நம்முடைய கோபம்,பயம் அல்லது வெட்கம் போல அல்லாமல் உண்மையின் ஆழ்ந்த அடித்தளமாகிய, தேவனுடைய அன்பை, வளர்ந்தவர்களாகிய நமக்கு புரிந்து கொள்வது கடினமாயிருக்கின்றது. எதைக் குறித்து நாம் மிகவும் அஞ்சுகின்றோமோ அதன் அடிப்படையில், இவ்வுலகு நம்மை சில குழுக்களாக பிரித்து வைத்துள்ளது. நாம் எதை உண்மை எனக்கருதுகின்றோமோ அதைக் குறித்து எச்சரிக்கின்ற குரலை நாம் அலட்சியப்படுத்தி, அல்லது குற்றப்படுத்தி விட்டு, நாம் ஏதோ ஒன்றில் இணைந்து விடுகிறோம்.
வஞ்சகங்கள், அதிகார போராட்டங்களின் மத்தியில், தேவனுடைய அன்பு, இருளில் பிரகாசிக்கின்ற ஒளியாக, நம்மை தாழ்மை, நம்பிக்கை, மற்றும் அன்பின் பாதையைக் கற்றுக் கொள்ளும் படி, அழைக்கின்றது. (1:7-9; 3:18) .இந்த ஒளி காட்டும் உண்மைகள் வருத்தத்தை தருவதாக இருந்தாலும், நாம் இன்னும் நேசிக்கப்படுகிறோம் என்பதை தெரிந்து கொள்வோம் (4:10,18; ரோம. 8:1). ஜென்னா என் மீது சாய்ந்து கொண்டு, மென்மையாக என்னுடைய காதுக்குள் “உலகளவுக்கு உன்னை நேசிக்கிறேன்” என்றாள், நானும் “நான் உன்னை உலகளவு நேசிக்கிறேன்” என்றேன். ஒவ்வொரு கணமும் நான் அளவற்ற அன்பிற்குள்ளும், கிருபைக்குள்ளும் இருப்பதை நினைப்பதற்கு கிடைத்த தருணத்திற்காக நன்றி கூறுகிறேன்.
அன்பை விட பயம் பெரியது என்று நம்பும்படியாக அழுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டா? நாம் பயப்படத் தேவையில்லை என நம்பும் போது, நாம் பிறரோடு கொண்டுள்ள உறவில் எப்படி மற்றம் ஏற்படுகின்றது?
அன்புள்ள தேவனே, உம்முடைய அன்பிற்காக நன்றி கூறுகின்றேன். எங்களுடைய பாதை இருளாகத் தோன்றினாலும், உம்முடைய அன்பையும், நீர் காட்டும் வெளிச்சத்தையும் நம்பி பின் தொடர எங்களுக்கு உதவியருளும்.