எத்தியோப்பியாவில் ஏழு மனிதர்கள் சேர்ந்து, ஒரு பன்னிரண்டு வயது சிறுமியை, காட்டுக்குள் கடத்திச் சென்று, துன்புறுத்தினர். அவளுடைய கூக்குரலைக் கேட்ட ஒரு சிறு சிங்கக் கூட்டம், ஓடி வந்து, கடத்தல் காரர்களைத் துரத்தி விட்டு, அவளைப் பாதுகாத்தது. எத்தியோப்பியா காவல் துறையினர், ஏழு நாட்கள் கழித்து அவளைக் கண்டு பிடித்த போது, மூன்று கருப்பு பிடரி முடியைக் கொண்ட சிங்கங்கள், அவளைக் காவல் காத்துக் கொண்டிருந்தன. காவல் துறையினரைக் கண்ட சிங்கங்கள், அவளை அவர்களுக்கு ஒரு பரிசாக விட்டு விட்டு, ஓடி மறைந்தன. காவல் துறை சார்ஜென்ட் வொண்டிமு, இதனை ஒரு பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.
இந்த இளம்பெண்ணிற்கு ஏற்பட்டதைப் போன்று வன்முறைகளும், தீமைகளும் நம்மையும் மேற்கொள்ளலாம், நம்பிக்கையற்ற நிலையில் பயங்கரத்துக்குள் நம்மை கொண்டு செல்லலாம். முற்காலத்தில், யூத ஜனங்கள் இத்தகைய நிலையில் தான் இருந்தனர். மூர்க்கமான படைகளால் கவிழ்த்துப் போடப்பட்டனர். தப்பிக் கொள்ள ஒரு வழியும் இல்லாதிருந்தது. பயம் அவர்களைக் கவ்விக் கொண்டது. தேவன் தனது மாறாத பிரசன்னத்தை தம் ஜனங்களுக்கு மீண்டும் கொடுத்தார். “இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்” (செப். 3:15) நம்முடைய சொந்த கலகங்களால், நாம் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டாலும் தேவன் நம்மை மீட்க வருகின்றார்.” உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார், அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்” (வச. 17).
சோதனைகள் நம்மை மேற்கொள்ளும் போதும், என்ன துன்பம் வந்தாலும் யூதா கோத்திரத்துச் சிங்கம், இயேசு நம்மோடிருக்கிறார். (வெளிப்படுத்தல் 5:5) நாம் தனித்து விடப்பட்டாலும் நம்முடைய வல்லமையுள்ள ரட்சகர் நம்மோடிருக்கின்றார். எத்தகைய பயம் நம்மை ஆழ்த்தினாலும் தேவன் நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார்.
உனக்குள் இருக்கும் மிகப்பெரிய பயம் என்ன? தேவன் உன்னோடு இருக்கின்றார் என்ற வார்த்தை உன்னை எப்படி ஊக்கப்படுத்துகின்றது?
பராக்கிரமசாலியான தேவனே, நீர் எனக்கு வேண்டும். நீர் பராக்கிரமசாலியாக என்னோடிருந்து, நான் பயத்தை மேற்கொள்ள எனக்கு உதவியருளும் .நான் உம் பேரில் நம்பிக்கையாயிருக்கிறேன்.