சான் பிரான்ஸிஸ்கோ நகரின் சுகாதார பணியாளர்கள், போதை மருந்துக்கு அடிமையாகி, வீடற்று, தெருக்களில் வசிப்போருக்கு, மருத்துவ உதவியளித்து அவர்கள், தங்கள் போதை பழக்கத்திலிருந்து விடுபட உதவினர். வீடற்றோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இது ஆரம்பிக்கப்பட்டது. சாதாரணமாக நோயாளிகளைச் சந்திக்கும்படி, மருத்துவர்கள், தங்கள் மருத்துவ மனையில் காத்திருப்பர். ஆனால் இங்கு, நோயாளிகள் மருத்துவரைத் தேடிச் செல்லத் தேவையில்லை, அவரைச் சந்திக்கும் நேரத்தை ஏற்கனவே பெற்றிருக்க வேண்டிய அவசியமுமில்லை. மருத்துவ உதவி, பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வரும். 

இந்த சுகாதார பணியாளர்கள், விருப்பத்தோடு பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வரும் காட்சி, இயேசு கிறிஸ்துவும் நம்முடைய தேவைகளில் நம்மைத் தேடி வந்ததை நினைவுப்படுத்துகின்றது. அந்நாட்களில் மதத் தலைவர்கள் யாரைப் புறக்கணித்தார்களோ, அவர்களையே, இயேசு தம் பணிக்காலத்தில் தேடி வந்தார், “அவர் ஆயக்காரரோடும், பாவிகளோடும்’’ உணவருந்தினார், (வச. 16) அவர் ஏன் இப்படிச் செய்கிறாரெனக் கேட்டபோது, “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ள வர்களுக்கு வேண்டியதில்லை” என்றார். (வச. 17) மேலும் அவர், நீதிமான் களையல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன், என்றார்

நாம் சுகவீனராக, நமக்கொரு மருத்துவர் தேவையென உணரும்போது, (ரோம. 3:10) இயேசு விருப்பத்தோடு “ஆயக்காரோடும், பாவிகளோடும்” போஜனம் பண்ணினதையும், அவர் நம்மையும் சந்திக்க ஆர்வமாயிருப்பதையும் ஏற்றுக்கொள்வோம். அந்த சான் பிரான்சிஸ்கோ நகரின் சுகாதாரப் பணியாளர்களைப் போன்று, தேவன் நம்மையும் தெரு பணியாளர்களாக நியமித்துள்ளார். நாம், அவர் தரும் மீட்பின் செய்தியை தேவையிருப்போருக்கு எடுத்துச்செல்வோம்.