“நீ பெரியவனான பின்பு என்னவாக வேண்டுமென விரும்புகின்றாய்?” இந்தக் கேள்வியை நம்மிடம், நாம் குழந்தைகளாயிருந்தபோது அல்லது வளர்ந்த பின்பு கூட கேட்டிருக்கலாம். ஆர்வ மிகுதியால் இக்கேள்வி உருவானது. இதற்கான விடை, ஒருவருடைய எதிர் கால இலட்சியத்தை வெளிப்படுத்தும். வருடங்கள் செல்லச் செல்ல என்னுடைய விடை மாறிக் கொண்டேயிருந்தது .கால் நடைகள் பராமரிப்பவரிலிருந்து டிரக் ஓட்டுனர், இராணுவ வீரர், என மாறியது. நான் கல்லூரிக்குச் சென்று மருத்துவராக வேண்டுமெனத் தீர்மானித்தேன். ஆனால், ஒருவர் கூட “ஓர் அமைதியான வாழ்வை” அடைய விரும்புகிறேனெனக் கூறியதேயில்லை.
இதைத் தான் பவுல் தெசலோனிக்கேயருக்குச் சொல்கின்றார். முதலாவது அவர், ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவும், நாடெங்குமுள்ள தேவனுடைய குடும்பத்தினரை நேசிக்கும்படியும் கூறுகின்றார் (1 தெச. 4:9-10). அவர் மேலும் ஒரு பொதுவான அறிவுரையைக் கூறுகின்றார். அது அவர்கள் கையிட்டுச்செய்கின்ற அனைத்து வேலைகளையும் குறிப்பிடுகின்றது. “நீங்கள் அமைதலுள்ளவர்களாய் இருக்கும்படி நாடவும்” (வச. 12) என்று சொல்கின்றார். “உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலை செய்யவும் வேண்டுமெனவும் புத்தி சொல்கின்றார்’’ (வச. 12). நாம் நம் குழந்தைகள் அடையவிரும்பும் இலட்சியங்களையும், அவர்களின் ஆவல்களையும் குறித்து ஊக்கமிழக்கச் செய்ய வேண்டாம். ஆனால் எதை அடைய விரும்பினாலும் அதை அமைதலுள்ள ஆவியோடு அடைய வேண்டுமென்பதை ஊக்கப்படுத்துவோம்.
நாம் வாழும் இன்றைய உலகில் இலட்சியத்தையும் அமைதியையும் தனித்தனியே பார்க்கமுடியாது. ஆனால் நம் வாழ்க்கையோடு தொடர்புடையதையே வேதாகமம் கூறுகின்றது. எனவே நாம் அமைதலுள்ள வாழ்க்கை வாழத்தொடங்கினால் எப்படியிருக்கும் என்பதைக் கருத்தில் கொள்வோம்.
“உன் சொந்த வேலையைப் பார்” என்ற பவுலின் கூற்று உனக்கு எப்படி பொருந்துகிறது? யாருடைய அமைதலான வாழ்வை நீயும் பின் பற்ற விரும்புகின்றாய்?
இயேசுவே, அமைதலுள்ள வாழ்வை செயல்படுத்த கடினமாயுள்ளது. இந்த உலகோடு ஒட்டாமல் வாழவும் எனக்கு வழியில்லை. நான் என்னுடைய சொந்த வேலையைச் செய்து இவ்வுலகினின்றும் என்னை முழுதும் விலக்கிக்கொள்ளாமலும் உலகின் சத்தத்தை அதிகப்படுத்தாமலும் இருக்க உதவும்.