எங்களுடைய நாய் ரூபெர்ட் சிறிய குட்டியாக இருந்த போது, வெளியிடங்களுக்குச் செல்வதற்கு மிகவும் பயப்படும். நான் அதனை வலுக் கட்டாயமாக அருகிலுள்ள பூங்காவிற்கு இழுத்துச் செல்வேன். அப்படிச் சென்றிருந்த போது ஒரு நாள், நான் அதனைக் கட்டி வைத்திருந்த கயிற்றை விட்டு விட்டேன். அது வேகமாக ஓடி, தான் பாதுகாப்பான இடமெனக்கருதும் எங்கள் வீட்டை அடைந்தது .
இந்த அனுபவம், எனக்கு ஒரு மனிதனை நினைவுக்கு கொண்டு வருகின்றது. நாங்கள் அமர்ந்திருந்த விமானம், ஓடுதளத்தில் ஓட ஆரம்பித்ததும், அருகிலிருந்த மனிதன் என்னிடம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தான். “நான் இந்த விமான பயணத்தின் போது மது அருந்தி விடுவேன்” என்றான்.” “குடிக்க விரும்பவில்லை என்பது போல தோன்றுகின்றதே” என்றேன். “ஆம்” என்றான். “ஆனால் நான் மறுபடியும் குடிக்க ஆரம்பித்து விடுகிறேன்” என்றான். அவன் குடித்து விட்டான். அவன் விமானத்திலிருந்து இறங்கிய போது, அவனுடைய மனைவி அவனை அணைத்துக் கொண்டாள். அவன் அருந்தியிருந்த மதுவின் நாற்றத்தை முகர்ந்ததும் அவனைத் தள்ளி விட்டாள். இதனைக் காண்பதற்கு மிகவும் வேதனையாக இருந்தது. மது அருந்தினால் தான் ,பாதுகாப்பாக இருப்பதாக அவன் எண்ணுகின்றான். ஆனால் அப்படியல்ல.
இயேசு தன்னுடைய பணிக்காலத்தை துவங்கியதும், “தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்” என்றார் (மாற். 1:15) மனந்திரும்புதல் என்பது எதிர் திசைக்குத் திரும்புதல். “தேவனுடைய ராஜ்யம்” என்பது நம்முடைய வாழ்க்கையை அவருடைய அன்பின் கட்டளைகளால் ஆளுகை செய்வதாகும். நம்மைச் சிக்க வைத்துவிடும் ஓரிடரத்திற்கு ஓடிச் செல்வதை விட ,அல்லது பயத்தாலும், அடிமைத்தனத்தாலும் ஆளுகை செய்யப் படுவதையும் விட, தேவன் நம்மை ஆளும்படி ஒப்புக்கொடுப்போமானால், அவர் அன்போடு நம்மை ஒரு புதிய வாழ்விற்குள்ளும், விடுதலைக் குள்ளும் நடத்திச் செல்வார்.
இன்றைக்கு, ரூபெர்ட் பூங்காவினுள் குரைத்துக் கொண்டு, மகிழ்ச்சியோடு ஓடுகின்றது. நான் விமானத்தில் சந்தித்த அந்த மனிதனும் தான் பாதுகாப்பானது என நம்பிக் கொண்டிருக்கும் மாய இடத்தை விட்டு விட்டு இதே மகிழ்ச்சியையும், விடுதலையையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென ஜெபிக்கிறேன்.
பயமும் மன அழுத்தமும் உன்னைத் தாக்கும் போது எத்தகைய பாதுகாப்பினைத் தேடி ஓடுகின்றாய்?
அவ்விடத்தை விட்டு வெளியேறி தேவன் தரும் விடுதலையை எப்படி பெற்றுக் கொள்ளப் போகின்றாய்?
இயேசுவே, உம்மை விட்டு விட்டு, வாழ்வையும், சந்தோஷத்தையும் நாடித் தவறான இடங்களுக்கு ஓடுவதற்காக மன்னியும். அவற்றை விட்டு, என் வாழ்வை உம் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன். உண்மையான விடுதலைக்கு நேராய் வழிநடத்தும்.