கடுமையான குளிர் காலத்தில், எம்மா தன்னுடைய குடும்பத்தின் நபர் ஒருவருக்கு, அவருடைய நீண்ட நாள் சுகவீனத்தில் உதவினாள். கேம்பிரிட்ஜ் நகரிலுள்ள அவளுடைய வீட்டினருகிலுள்ள செர்ரி மரங்களைக் கடந்து செல்லும் போதெல்லாம் அவளுக்கு ஓர் ஊக்கம் கிடைக்கும். அந்த இளஞ்சிவப்பு நிற செர்ரி மலர்களினூடே ஒரு வெள்ளையான மலர் கொத்து வெளிப்பட்டது. ஒரு புத்திசலியான தோட்டக்காரர் அந்த செர்ரி மரக் கிளையில் வெண்மை மலர் கொப்பு ஒன்றை ஒட்ட வைத்தார். அந்த அசாதாரணமான மரத்தை எம்மா கடந்து செல்லும் போதெல்லாம், திராட்சைக் கொடிகளைப் பற்றி இயேசு சொன்ன வார்த்தைகளை அவள் நினைவு கூர்ந்தாள். இயேசுவின் சீடர்களாகிய நாம் அவரில் கிளைகளாக ஒட்டப் பட்டுள்ளோம். அவரில் நிலைத்திருந்து அவர் தரும் ஆகாரத்தையும், பெலனையும் பெற்றுக் கொண்டோமேயானால் நாமும் மிகுந்த கனிகளைத் தர முடியும் (யோவா. 15:6).
எம்மா தன் குடும்ப நபர் ஒருவருக்கு ஆதரவாக இருந்தது போல, அவள் இயேசுவில் நிலைத்திருந்து தன்னுடைய ஆகாரத்தை இயேசுவிடமிருந்து பெற்றுக் கொண்டாள்.
இளஞ்சிவப்பு ,மலர்களினிடையே இருந்த வெண் மலர்கள், இந்த உண்மையை உறுதிப் படுத்தின. அவளும் இயேசுவில் நிலைத்திருந்தால் அவளுக்குத் தேவையான பெலனை அவர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
திராட்சைக் கொடியானது செடியில் நிலைத்திருக்க வேண்டியது எத்தனை அவசியமோ அப்படியே இயேசுவின் விசுவாசிகளான நாமும் அவரோடு நெருங்கி ஜீவிக்க வேண்டும். அப்பொழுது நம்முடைய விசுவாசம் உறுதியாயிருந்து பலன் தரும்.
தன்னை திராட்சைச் செடி என்று கூறும் இயேசு, இஸ்ரவேலர் அதன் கொடிகள் என்றும், அவர்கள் தம்மோடு இணைக்கப்பட்டவர்கள் என்றும் உணர்த்துகிறார். அவரில் நிலைத்திருக்கும் போது, அவருடைய போஷாக்கையும் பெலனையும் பெற்று, மிகுந்த கனிகளைக் கொடுப்பர் (யோவா. 15:5).
ஒரு மரத்தின் கிளைகள் அம்மரத்தின் வேர்த் தொகுதியிலிருந்து சத்துக்களைப் பெற்றுக் கொள்கின்றன என்ற கருத்து உன் மனதில் என்ன எண்ணங்களைக் கொண்டு வருகிறது? இயேசுவை திராட்சச் செடியாகக் கருதும் போது என்ன ஊக்கம் உனக்குள் கிடைக்கின்றது?
இயேசப்பா, நான் உம்மில் நிலைத்திருக்க உதவியதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். எனக்குத் தேவையான சமாதானம், நம்பிக்கை மற்றும் பெலனை இன்று எனக்குத் தந்தருளும்.