எழுத்தாளரான பெரில் மார்க்ஹாம் எழுதிய இரவில் மேற்குத்திசையில் “In west with the night” என்ற புத்தகத்தில் வரும் கதாநாயகிக்கு கம்ஸிஸ்கன் என்ற கம்பீரமான ஆண் குதிரையை பழக்கும் கடினமான பணி அவளுக்குக் கொடுக்கப் பட்டது. அவள் அநேக யுக்திகளைக் கையாண்டும் அவளால் அந்த முரட்டுக் குதிரையை அடக்க முடியவில்லை. எத்தனை முயன்றும் அதனுடைய விடாப்பிடியான குணங்களில் ஒன்றை மட்டுமே அவளால் அடக்க முடிந்தது.
நம்மில் எத்தனை பேர் இதைப் போலவே நம்முடைய நாவை அடக்க போராடிக் கொண்டிருக்கின்றோம்? அப்போஸ்தலனாகிய யாக்கோபு நாவைக் குதிரையின் கடிவாளத்திற்கும், கப்பலின் சுக்கானுக்கும் ஒப்பிடுகின்றார் (யாக். 3:3-5). மேலும், “துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது, என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது” என்று வருந்துகின்றார்.
அப்படியானால் நாவினையடக்க என்ன செய்யலாம்? அப்போஸ்தலனாகிய பவுல் நாவையடக்கும்படி சில ஆலோசனைகளைத் தருகின்றார். முதலாவது உண்மையை மட்டும் பேச வேண்டும் (எபே. 4:25). அதற்காக கடினமான வாழ்க்கைகளை உபயோகிக்க வேண்டாம். மேலும், “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம். பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும் படி பேசுங்கள்” (வச. 29) என்கின்றார். நம் பேச்சிலுள்ள வேண்டாத வார்த்தைகளை அகற்றிவிட வேண்டும். “சகல விதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும் கூக்குரலும் தூஷணமும் மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக் கடவது.”
(வச. 31) இது எளிதானதா? நம்முடைய சுய முயற்சியினால் இது கூடாததுதான். ஆனால் பரிசுத்த ஆவியானவரை நாம் சார்ந்திருக்கும் போது அவர் நமக்கு உதவி செய்கின்றார்.
கம்சிஸ்கன் என்ற குதிரையோடு போராடும் போது வெற்றி பெறும் வரை தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமென மார்க்ஹாம் கற்றுக் கொண்டார். இதைப் போன்று நாவையடக்குவதற்கும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
உன் நாவையடக்க முடியாதபடி என்ன காரியத்தில் தடுமாறுகின்றாய்? வரும் நாட்களில் என்ன செயல் முறைகளைக் கையாண்டு அதனை மேற்கொள்வாய்?
இயேசு கிறிஸ்துவே, என்னுடைய வாயின் வார்த்தைகளை நான் கட்டுப் படுத்த எனக்கு உதவியருளும்.