கீழ் நோக்கிய பனிச் சறுக்கலில், பாதையைக் குறிப்பிட நீல வண்ணப் பட்டைகள் வெண்மையான பனியின் மீது தீட்டப்படும். விகற்பமான வளைவுகள் கவனச் சிதறலை ஏற்படுதுவது போல பார்வையாளர்களுக்குத் தோன்றினாலும், பங்கு பெறும் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கும், வெற்றிக்கும் அது முக்கியமானதாக அமைகின்றது. வீரர்கள் வேகமாக மலையடிவாரத்தையடைய அந்த வண்ணப் பட்டை ஒரு வழிகாட்டியாக செயல்படுகின்றது. வெண்பனியில் வரையப்பட்ட தெளிவான கோடுகள் வீரர்கள் சரியான பாதையைக் காண உதவுகின்றது. மிக வேகமாகச் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பிற்கும், மேடு பள்ளங்களைச் சரியாகக் கவனித்து, பாதுகாப்பாகச் செல்லவும் இத்தகைய வண்ணக் கோடுகள் உதவுகின்றன.
வாழ்க்கையாகிய ஓட்டத்தில், பாதுகாப்பாக ஓடுவதற்கு ஞானத்தைத் தேடும்படி தன் மகன்களை சாலமோன் வற்புறுத்துகின்றார். நீலக் கோடுகளைப் போல் ஞானம் அவர்களின் வாழ்வை நேரானப் பாதையில் அழைத்துச் செல்லும். அவர்கள் தடுமாறி விழாதபடி காத்துக் கொள்ளும் என்கின்றார் (நீதி. 4:11-12) தேவன் தரும் ஞானத்தை விட்டு விலகாமல் வாழ்ந்தால், அவர்கள் செல்வ வாழ்வை அநுபவிக்கலாம் என்பது அவர்களின் தந்தையின் ஆழ்ந்த நம்பிக்கை.
நம்முடைய அன்புத் தந்தையாகிய தேவன் நமக்கு “நீலக் கோடு” வழிகாட்டியாக வேதாகமத்தைத் தந்துள்ளார். இவ்வுலகில் நாம் எங்கு வேண்டுமானாலும் சறுக்கி விளையாட உரிமையைத் தந்துள்ளார். வேதத்தின் வழியாக அவர் தரும் ஞானம் சறுக்குதலுக்கு வழிகாட்டியாக செயல் படுகின்றது அதைக் கண்டுபிடிப்பவர்கள் வாழ்வடைவர். (வச. 22). நாம் தீமையை விட்டு விலகி, தேவனோடு நடப்போமாகில் அவருடைய நீதி, நாம் நடக்க வேண்டிய வழியைக் காட்டும். நம் கால்கள் வழுவாதபடி அவை நம்மை காத்து ஒவ்வொரு நாளும் நாம் முன்னேறிச் செல்ல, அவை நம்மை வழி நடத்தும் (வச. 12,18)
தேவன் தரும் ஞானத்தைத் தேடி கண்டடைதல் உன் வாழ்வை எப்படி தடுமாறாமல் காக்கின்றது? என்னென்ன வழிகளில் நீ இயேசுவைப் போல் மாறுகின்றாய்?
தேவனே, நீர் தந்த வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன், உம்முடைய ஞானத்தை நான் உறுதியாக பற்றிக்கொள்ள எனக்கு உதவியருளும்.