தாமஸ் எடிசன் முதல் மின் விளக்கை எரியச் செய்தார். ஜோனாஸ் சாக் போலியோவிற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடித்தார். நாம் தேவனை ஆராதிக்கும்படி, பாடும் அநேக பாமாலைகளை ஏமி கார்மைக்கேல் எழுதினார். நீ என்ன செய்தாய்? இவ்வுலகிற்கு நீ ஏன் அனுப்பப் பட்டாய்? உன் வாழ்வை எப்படி பயனுள்ளதாக்கப் போகின்றாய்?
ஆதியாகமம் 4ம் அதிகாரம் சொல்லுகிறது: ஏவாள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று முதல் முறையாக காயீனைக் கையிலேந்தி, “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்” (வச. 1) என்கின்றாள். முதல் குமாரனைப் பெற்றெடுத்த வினோதமான அநுபவத்தை வெளிப்படுத்தும் வாக்கியம், தேவனாகிய கர்த்தரின் உதவியை முற்றிலும் சார்ந்திருத்தலை விளக்குகின்றது. “கர்த்தரால்” என விளக்குகின்றாள். தொடர்ந்து ஏவாளின் வித்திலிருந்து தோன்றிய மற்றொரு குமாரன் மூலமாக தேவன் தம் ஜனத்திற்கு ஒரு விடுதலையை கொடுக்கின்றார் (யோவா. 3:16). என்ன அருமையாக இப் பாரம்பரியம் தொடர்கின்றது.
பெற்றோராயிருத்தலென்பது இவ்வுலகிற்கு ஜனங்கள் தொடர்ந்து கொடுத்துவரும் ஒரு பங்களிப்பு. உன்னுடைய பங்கு ஒருவேளை நீ அமர்ந்து எழுதுன்ற அல்லது பின்னல் வேலை செய்கின்ற அல்லது சித்திரம் வரைகின்ற அறையிலிருந்து வெளியாகலாம். தேவனுடன் தொடர்பற்றிருக்கின்ற ஒருவருக்கு உன் வாழ்வு ஒரு முன் மாதிரியாக அமையலாம் அல்லது உன்னுடைய முதலீடு ஒரு வேளை உன் இறப்பிற்குப்பின் நீ நினையாத வகையில் வெளிவரலாம். அது நீ விட்டுச் சென்ற வேலையாகவோ, உன்னுடைய தொழிலில் நீ செய்த காரியத்தின் புகழ்ச்சியாகவோ இருக்கலாம். எதுவாயினும் உன்னுடைய வார்த்தைகள் ஏவாள் தேவனைச் சார்ந்திருந்ததைப் போன்று அமையுமா? கர்த்தரால், அவருடைய நாம மகிமைக்காக நீ என்ன செய்யப் போகின்றாய்?
நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற பின்பு உன்னை எவ்வாறு நினைவு கூற வேண்டுமென்று நீ விரும்புகின்றாய்? அதனை நிறைவேற்ற என்னென்ன வழிகளில் தேவனுடைய உதவியைத் தேடுகின்றாய்?
அன்புள்ள தேவனே, உம்மாலேயன்றி என்னால் எந்த ஒரு நிலைத்திருக்கும் பாரம்பரியத்தையும் இவ்வுலகிற்கு கொடுக்க முடியாது. எல்லாவற்றிலும் நான் உம்மையே சார்ந்து வாழ எனக்கு உதவியருளும்.