‘நான் அதிகமாக முதிர்வடையும்போது மிகவும் ஞானமுள்ளவளாகிறேன். சில சமயங்களில் நான் என் மகனிடத்தில் பேசும்பொழுது, உம்முடைய வார்த்தைகளே என் வாயிலிருந்து வருகிறது”, என என் மகள் கூறினாள்.
என் மகளின் கள்ளங்கபடமற்ற இந்த பேச்சு என்னை சிரிக்க வைத்தது. இதேபோல என் பிள்ளைகளை வளர்க்கும்போதும், என் பெற்றோர்கள் என்னிடத்தில் உபயோகித்த வார்த்தைகளையே நானும் உபயோகித்தேன். நான் ஒரு தகப்பனாக மாறினபொழுது, என் பெற்றோர்களின் ஞானத்தைக்குறித்த எனது கருத்துக்கள் மாறியது. ஒரு சமயத்தில் ‘முட்டாள்தனமானது”, என்று நான் ஒதுக்கித் தள்ளினவைகள் எல்லாம் நான் நினைப்பதற்கும் மேலான ஞானமுள்ளது என்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன். இவைகளை நான் முதலில் அறிந்து கொள்ள முடியவில்லை.
வேதாகமம், ‘தேவனுடைய பைத்தியமானது உலகில் மிகப்பெரிய ஞானமாயிருக்கிறது”, என போதிக்கிறது (1 கொரி. 1:25).” தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று (வச. 21).
நம்மை ஆச்சரியப்பட வைக்கும் வழிகளை தேவன் நமக்காக எப்பொழுதும் வைத்திருக்கிறார். ஒரு வெற்றியுள்ள ராஜா இந்த உலகத்திற்கு வருவதற்கு பதிலாக, தேவனுடைய குமாரன் ஒரு பாடுகளுள்ள வேலையாளாக வந்து, தன்னை மிகவும் தாழ்மையான சிலுவைமரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அவர் மகிமைக்குள் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் இவை நடந்தன.
தேவனுடைய ஞானத்தில், தாழ்மையானது பெருமைக்கும் மேல் மதிப்பிடப்படுகிறது. அன்பானது தகுதியில்லாத இரக்கம் மற்றும் கனிவிற்க்கு மேலாக மதிப்பிடப்படுகிறது. சிலுவையின் மூலமாக, நம்முடைய ஜெயிக்க முடியாத மேசியா, நம்மை மீட்கும்படி பிரதானமான பலியாக மாறினார் (எபி. 7:25).
இதனால், இரட்சிக்கப்படுகிறவர்கள் அவருக்குள்ளாக தங்கள் விசுவாசத்தை வைக்கக்கூடும்.
தேவனுடைய வழிகள் எப்பொழுது உங்களை குழப்பத்திற்க்குள்ளாக்கியது? அவைகள், தேவனுடைய வழிகள், நம்முடைய வழிகளல்ல என்கின்ற உண்மையை உங்களுக்கு எவ்வாறு புரிய வைத்தது?
பரலோகத் தந்தையே! உம்முடைய வழிகளின் ஞானத்திற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். இன்று நான் உம்மை நம்பி, தாழ்மையோடுகூட உம்மோடு நடந்து வர எனக்கு உதவி செய்யும்.