“சமாதானம் என்கின்ற ஆறு” என்ற புத்தகத்தின் ஆசிரியர் லீஃப் எங்கர், மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனாகிய ஜெரமையா லேண்ட் என்கின்ற, பள்ளியின் வாயில் காப்போனாக பணியாற்றின ஒருவரைக் குறித்து எழுதுகிறார். அவர் ஆழமான, சில சமயங்களில் அற்புதமான விசுவாசத்தை உடையவராகக் காணப்பட்டார். அந்த புத்தகம் முழுவதும் அவருடைய விசுவாசம் பல வகைகளில் பரீட்சை பார்க்கப்பட்டது.
ஜெரமையாவின் பள்ளியானது செஸ்டர் ஹோல்டன் என்ற, தோல் வியாதி கொண்ட ஒரு சின்ன புத்தி படைத்த கண்காணிப்பாளரால் நடத்தப்பட்டது. ஜெரமையாவின் வேலையானது மிகவும் பாராட்டுக்குரியதாகவே அமைந்தது சாக்கடையிலிருந்து தெளிக்கும் கழிவுகளை குறை சொல்லாமல் சுத்திகரிப்பது, கண்காணிப்பாளர் உடைத்துப் போட்ட கண்ணாடித் துண்டுகளை பொறுமையோடு எடுத்துப் போடுவது போன்ற தன்னை வேலையை விட்டுத் துரத்துவதற்கு கண்காணிப்பாளர் மேற்கொண்ட எல்லா முயற்சிகளையும் பொறுமையோடு எதிர்கொண்டார். ஒரு நாள் எல்லா மாணவர்களுக்கும் முன்பாக ஜெரமையா குடித்திருப்பதாக பொய்யாகக் கூறி அவரை அவமானப்படுத்தி, வேலையிலிருந்து நீக்கி விட்டார். ஒரு அவமானப்படுத்தும் காட்சியாக இருந்தது.
இதற்கு ஜெரமையா எவ்வாறு பதிலளித்தார்? அவர் சட்டரீதியாக, தன்னை வேலையிலிருந்து நீக்கிய கண்காணிப்பாளரை நடவடிக்கை எடுத்திருக்கலாம். அல்லது, அவர் மேல் சுமத்தப்பட்ட பழியை ஏற்றுக்கொண்டு வெளியேறியிருக்கலாம். இவ்விதமான சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்திருப்பீர்களென சற்று யோசித்துப்பாருங்கள்.
‘உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்” என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார். ‘உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” (லூக். 6:27-28). இந்த சவால் கொடுக்கும் வார்த்தைகளெல்லாம் தீமையை மன்னிப்பதற்கோ, அநீதி தழைப்பதற்காகவோ கொடுக்கப்படவில்லை. மாறாக, அவைகள் நாம் தேவனைப்போல செயலாற்ற வேண்டும் (வச. 36) எனத்தீர்மானித்து, தேவன் என் விரோதியை எவ்வாறு நல்லவனாக உருவாக்க விரும்புகிறார் என்பதை அறிந்து அதற்கு நான் எவ்வாறு உதவக்கூடும்? என்ற கேள்வியை உடையவராக வாழவேண்டும். ஜெரமையா அந்தக் கண்காணிப்பாளரை பார்த்து அவர் முகத்தை தொடுகிறார். ஹோல்டன் பின்னே நகருகிறார். பிறகு, தன் கன்னங்களையும், முகநாடியையும் அதிசயத்தோடு தொட்டுப் பார்க்கிறார். தழும்புகளுளான அவர் முகம் குணமடைந்து தொட்டுப் இருக்கிறது. ஒரு சத்துரு கிருபையினால் தொடப்பட்டுள்ளார்.
ஜெரமையாவின் சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட்டால் முதலில் உங்களுக்கு ஏற்படும் அனுபவம் என்ன? ஒரு கடினமான மனிதன் தேவனுக்கு அருகில் சென்று அவர் சித்தத்தை நிறைவேற்றும்படி செய்ய நீங்கள் என்ன செய்யவேண்டும்?
கர்த்தாவே, நான் அநியாயமாக, தவறாக அல்லது தொல்லைக்குள்ளாக கடந்து செல்லும்போது, என் சத்துரு உம்மருகில் வருவதற்கு நான் எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என எனக்குக் கற்றுக்கொடும்.