1865ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைவர் ஆபிரகாம் லிங்கன் ஃபோர்ட்; தியேட்டரில் சுடப்பட்ட இரவு, அவருடைய பாக்கெட்டில் கீழ்க்கண்டவைகள் இருந்தன. இரண்டு மூக்குக் கண்ணாடிகள், லென்ஸ்ஸை சுத்தம் செய்யும் திரவம், ஒரு பாக்கெட் கத்தி, ஒரு கடிகாரம், ஒரு கைக்குட்டை, ஒரு தோல் பர்ஸ் அதனுள்ளே 5 டாலர்கள். சங்கத்தின் பணம், 8 செய்தித்தாள்களின் கத்தரிப்புகள். அதோடு அவரையும் அவர் கொள்கைகளையும் பாராட்டுகிற பல பாராட்டுதல்களும் இருந்தன.

தலைவருடைய பாக்கெட்டிலுள்ள சங்கப்பணம் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால், அவரைக்குறித்த நல்ல செய்திகளைக் குறித்து நான் அறிந்தவனாதலால் சந்தேகப்படவில்லை. எல்லாருக்கும் உற்சாகப்படுத்துதல் அவசியம், அதுவும் ஆபிரகாம் லிங்கன் போன்ற பெருந்தலைவர்களுக்கும். ஒரு வேளை தன்னுடைய மரணத்திற்கு சற்று முன்பு அந்த பாராட்டு செய்திகளைத் தன் மனைவிக்கு அவர் வாசித்துக் காண்பித்திருக்கக் கூடும்.

யாருக்கெல்லாம் உற்சாகம் தேவைப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? எல்லாருக்குமே! உங்களைச் சுற்றிப்பாருங்கள். உங்கள் கண்ணுக்கெட்டும் வரை உள்ளவர்கள் அவர்கள் தோற்றத்திலிருப்பதை விட நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கின்றார்கள். நாம் எல்லாருமே தோற்றுப்போனவர்கள், பல குறைபாடுகளைக் கொண்டவர்கள்.

நாம் எல்லாரும் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, ‘நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்” (ரோம. 15:2) என்ற வசனத்தைப் போலவும் நல்ல வார்த்தைகளை பேசதீர்மானித்து, ‘இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.” (நீதி. 16:24) என்ற வசனத்தைப் போலவும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட வசனங்களை ஒரு தாளிலோ அல்லது கைப்பேசியிலோ மற்றவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளும்படி நாம் முயல்வோமா? அவ்வாறு செய்வோமாயின், நாம் இயேசுவைப்போல மாறி தன்னைத்தானே பிரியப்படுத்திக்கொள்ளாமல் மற்றவர்களுக்காக வாழ்பவராக மாறிவிடுவோம் (ரோம. 15:3).