அந்தத் திருச்சபையில் இசை முழுவதுமாக நிரப்பின போது, நிறக் குருடரான லான்ஸ் ப்ரௌன் என்கின்ற ஓவியர், ஆலயத்தின் மேடையில் ஏறி அவருக்கு முன்னிருந்த ஒரு பெரிய வெண்ணிறத் துணிக்கு முன்பாகவும், திருச்சபையாருக்குத் தன் முதுகைக் காட்டியும் நின்று கொண்டு, தன்னுடைய பிரஷ்ஷினை கருப்பு நிற வண்ணத்தில் தோய்த்து எடுத்தார். அழகான முறையில் அவர் ஒரு சிலுவையை வரைந்து முடித்தார். படிப்படியாக அவர் பிரஷ்ஷைக் கொண்டும், கைகளை உபயோகித்தும் இந்த காட்சி சொல்லுபவர் கிறிஸ்துவின் சிலுவையிலறைதலையும், உயிர்த்தெழுதலையும் வரைந்து முடித்தார். அந்தத் துணியின் மற்ற பகுதியினை கருப்பு வண்ணமிட்டு பூர்த்திசெய்தார். மேலும், நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களை உபயோகித்து, மீதமுள்ள மொத்த படத்தினையும் 6 நிமிடங்களுக்குள்ளாக வரைந்து முடித்தார். அவர் அந்தத் துணி பேனரைத் தலைகீழாகத்திருப்பி, அதில் மறைந்துள்ள ஒரு தோற்றத்தை சபையாருக்குக் காட்டினார். அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மனதுருக்கம் நிறைந்த முகம்.
ஆலய ஆராதனையில் துரிதமான ஓவியத்தை வரைவதைக் குறித்து தனது நண்பர் கொடுத்த ஆலோசனையை ஏற்க ப்ரௌன் முதலில் தயங்கினார். ஆனால், இப்பொழுதோ அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து, தன்னுடைய ஓவியத்தின் மூலம் கிறிஸ்துவைப் பகிர்ந்து கொண்டு, மக்களை ஆராதனைக்குள் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு விதவிதமாகக் கொடுத்த வரங்களைக் குறித்த தரத்தினையும், நோக்கத்தையும் குறித்து பவுல் அப்போஸ்தலன் உறுதிப் படுத்துகிறார். அவருடைய குடும்பத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் தேவனுடைய நாம மகிமைக்காக, ஒவ்வொருவரையும் அன்பிலே கட்டி எழுப்ப உருவாக்கப்பட்டு இருக்கிறோம் எனவும் கூறுகிறார் (ரோம. 12:3-5). பவுல் மேலும் நம்மை நம் வரங்களைக் கண்டு பிடிக்கவும், அவைகளைப் பயன்படுத்தவும், அவற்றின் மூலம் மற்றவர்களை உருவாக்கி அவர்களை இயேசுவிற்கு நேராக வழிநடத்தவும், கருத்தோடும், சந்தோஷத்தோடும் ஊழியம் செய்ய நம்மை உற்சாகப்படுத்துகிறார் (வச. 6-8). தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஆவிக்குரிய வரங்கள், தாலந்துகள், திறமைகள் மற்றும் அனுபவங்களைக் கொடுத்து முழு இருதயத்தோடே அவருக்கு, திரை மறைவிலோ அல்லது எல்லாருக்கும் முன்பாகவோ ஊழியம் செய்யும்படியாக அழைத்திருக்கிறார். நாம் அவருடைய சிருஷ்டிப்பினைக் கொண்டாடும்போது, அவர் நம்முடைய தனித்தன்மையை உபயோகித்து, சுவிசேஷத்தினை பரப்பவும், மற்ற விசுவாசிகளை அன்பிலே கட்டவும் நம்மைப் பயன்படுத்துகிறார்.
தங்கள், தேவவரங்களை, தாலந்துகளை, திறமைகளை மற்றும் அனுபவங்களை சந்தோஷத்தோடு மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய பயன்படுத்த யாரையெல்லாம் நீங்கள் உற்சாகப்படுத்துவீர்கள்? நீங்கள் உங்களுக்கு அருளப்பட்ட வரங்களைத் தனித் தன்மையோடு எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?