ஒரு சிறு பையன் ஆலயத்திலிருந்து மிகவும் உற்சாகத்தோடும், ஆரவாரத்தோடும் அன்றைய நாள் முழுதும் பிடித்தப் பாடமான அப்பங்களும் மீன்களும் ஒரு சிறுவனைக் குறித்த மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்து சொன்னான். அவன், அந்தச் சிறுவன் எவ்வாறு தன் அப்பங்களையும், மீன்களையும் இயேசுவிடம் கொடுத்தான் என்பதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.
இயேசுவானவர் அன்று நாள் முழுவதும் மக்கள் கூட்டத்திற்கு போதித்துக் கொண்டிருந்தார். அவருடைய சீஷர்கள், அவர்கள், ஊருக்குள் போய் அப்பங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிட வேண்டும் என்று கூறினார்கள். இயேசு அவர்களுக்கு, ‘நீங்களே அவர்களுக்குப் போஜனம் கொடுங்கள்”, என்று கூறினார். (மத். 14:16) ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோர் அங்கு இருந்தபடியால் சீடர்கள் கலக்கமடைந்தார்கள். மீதமுள்ள கதை உங்களுக்குத்தெரியும். அந்தச் சிறுவன் தன்னுடைய மதிய உணவைக் கொடுத்தான் – ஐந்து சிறிய அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்கள் – இதைக் கொண்டுதான் இயேசுவானவர் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை போஷித்தார் (வச. 13-21). ஒரு கற்பனை கதை என்னவெனில், இந்த சிறுவனின் தாராள மனப்பான்மையைக் கண்டு, மற்றவர்களும் தங்கள், மதிய உணவைக் கொடுத்தார்கள் என்பதாகும். ஆனால், மத்தேயு தெளிவாக இது ஒரு அற்புதம் என நாம் புரிந்து கொள்வதற்காக விளக்கம் அளிக்கிறார். இந்த சம்பவமானது, நான்கு சுவிசேஷங்களிலும் இடம் பெற்றிருக்கிறது.
நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? குடும்பம், அயலகத்தார், நண்பர்கள், உடன் ஊழியர்கள், மற்றும் பலர் பல்வேறு விதமான தேவைகளோடு நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். நம்மை விட அதிகம் வசதிபடைத்தவர்களிடத்திற்கு நாம் அவர்களை அனுப்பலாமா? உண்மையாகவே சிலருடைய தேவைகள் நம்முடைய சக்திக்கும் மீறினதாகவே இருக்கும். ஆனால் எல்லா நேரத்திலும் அல்ல. உங்களிடத்தில் என்ன உள்ளதோ, ஒரு கட்டிபிடித்தல், ஒரு அன்பான வார்த்தை, கவனிக்கும் காதுகள், ஒரு சுருக்கமான ஜெபம், நீங்கள் பெற்ற ஞானத்தினையும் இயேசுவண்டைக் கொடுத்து அதைக் கொண்டு அவர் என்ன செய்கிறார் எனப் பாருங்கள்.
மற்றவர்களுக்குள்ள தேவையில் ஏதேனும் ஒன்றினை உங்களால் சந்திக்க முடியுமா? மற்றவர்களை ஆசீர்வதிக்க, உங்களால் என்ன கொடுக்க முடியும்?
இயேசுவே! மற்றவர்களை கவனித்துக் கொள்ளத் தேவையான வழிகளை அறிந்து கொள்ளக் கூடிய கண்களை எனக்குத் தாரும். எங்களை வழிநடத்தும், எங்களை பயன்படுத்தும்.