1900களின் ஆரம்பத்தில் பேக்கார்ட் மோட்டார் கார் கம்பெனி ஒரு வாக்கியத்தை உருவாக்கி, வாங்குபவர்களை ஊக்குவித்தது. அது என்னவெனில், ‘ஒன்றினை சொந்தமாகக்கொண்ட மனிதனைக் கேளுங்கள்” என்பதே. இது ஒரு வல்லமையான வாக்கியமாக அந்நாளில் திகழ்ந்தது. அது அந்தக் கார் கம்பெனியின் நன்மதிப்பை அதிகரித்து, அந்தக் காலகட்டத்தில் மிக உயர்ந்த, மற்றும் விலையுயர்ந்த காரினை உருவாக்குகின்ற கம்பெனியாய் உயர்த்தியது. இந்த பேக்கார்ட் கார் கம்பெனியின் எண்ணம் என்னவென்றால், கார் வாங்கின தனிப்பட்ட மனிதனின் சாட்சியானது கேட்பவர்களை உற்சாகமூட்டும் எனவும், தன்னுடைய நண்பன் தான் வாங்கின ஒருபொருளைக் குறித்த திருப்தியானது, ஒரு சக்தி மிகுந்த ஆதரவு என்று நினைத்தது.

தேவனோடு நமக்கு உள்ள நெருக்கமான உறவினை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது என்பது மற்றவர்கள் மீது நல்லதொரு தாக்கத்தை உருவாக்குகிறது. தேவன், நம்முடைய நன்றிகளையும் மகிழ்ச்சியையும் அவரோடு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறார். (சங். 66:1) சங்கீதக்காரன், தன் சங்கீதத்தில், தன் பாவத்திலிருந்து முற்றிலுமாக திரும்பினபோது, தேவன் தனக்கு அளித்த மன்னிப்பினைக் குறித்து மிகவும் வாஞ்சையோடு பகிர்ந்து கொள்ளுகிறார் (வச. 18-20).

வரலாற்றிலே தேவன் மகத்துவமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். உதாரணமாக, செங்கடலை இரண்டாகப் பிளந்தது (வச. 6). அவர் நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் மகத்துவமான காரியங்களைச் செய்கிறார். அதன்மூலம் நம் பாடுகளின் மத்தியில் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவரை நமக்குக் கொடுத்து, அவருடைய வார்த்தையை நாம் புரிந்துகொள்ளச் செய்கிறார். நம்முடைய அன்றாடத் தேவைகளையும் அவர் சந்திக்கிறார். நாம் இப்படிப்பட்ட சொந்த அனுபவங்களில் தேவனுடைய இடைப்படுதலைக் குறித்து, மற்றவர்களிடம் கூறும் பொழுது, நாம் மற்றெல்லா காரியங்களையும் விட விலையுயர்ந்த காரியத்தினை அவர்களுக்கு கொடுக்கிறோம் – நாம் தேவனுடைய நன்மைகளை உணர்ந்தவர்களாய் மற்றவர்களையும் அவர்களுடைய வாழ்விற்கான பயணத்தில் அவர்களை உற்சாகப்படுத்துகிறவர்களாயும் காணப்படுவோம்.