சாலையின் சிவப்பு விளக்கு எரியவே சிக்னலில் வண்டியை நிறுத்தினேன். ஏற்கனே நான் பார்த்திருந்த அதே நபர் அப்போதும் சாலையோரம் நின்றிருந்தார்.  “உணவுவாங்க பணம் இல்லை. எந்த உதவியானாலும் சரி” என்று கையில் ஓர் அட்டையை வைத்திருந்தார். அவருக்கு உதவுவதா வேண்டாமா என்று தெரியவில்லை, பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

உதவி தேவைப்படுவதுபோல நடிக்கிறவர்கள் இருக்கிறார்கள். வேறு சிலருக்கு உண்மையிலேயே உதவி தேவையிருக்கும், ஆனால் தவறான பழக்கங்களுக்கு அடிமைப்பட்டிருப்பார்கள். நம் நகரத்தின் சேவை பணிகளுக்கு பணம்கொடுப்பதுதான் சிறந்தது என்று சமூகப்பணியாளர்கள் எங்களிடம் கூறுகிறார்கள். மனப்பாரத்தோடு அங்கிருந்து கிளம்பினேன்.  அன்று நான் ஞானமாகச் செயல்பட்டிருந்தாலும்கூட, மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

“ஒழுங்கில்லாதவர்களையும் உழைக்காதவர்களையும் எச்சரியுங்கள், பலவீனமானவர்களுக்கு உதவிசெய்யுங்கள், எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள்” என்றுதான் மூலபாஷையில் (1 தெச. 5:14) சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நபர்களை அடையாளங்கண்டால்தான் சரியாக நாம் நடந்துகொள்ள முடியும். பலவீனமான அல்லது மனமுறிவுள்ள ஒருவரை எச்சரித்தால், அவர்களுடைய ஆவியை மேலும் சோர்வடையச் செய்துவிடுவோம். உழைக்காத ஒருவருக்கு உதவினால், அவரை மேலும் சோம்பலாக்க ஊக்கப்படுத்திவிடுவோம். எனவே, நமக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு, உண்மையில் உதவி தேவைப்படுகிறதென நாம் அறிந்தவர்களுக்கு உதவுவதுதான் சிறந்தது.

யாருக்காவது உதவும்படி தேவன் உங்களுடைய உள்ளத்தில் ஏவுகிறாரா? நல்லது! இப்போதே உதவிசெய்யத் துவங்குங்கள். அவருக்கு இன்ன தேவைகள்தாம் இருக்கிறதென நீங்களே ஏதாவது கற்பனைசெய்யாதீர்கள். அவருடைய பிரச்சனைகள் என்னவென்று கேளுங்கள், சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். ஜெபித்துவிட்டு, ஞானமாக உதவிசெய்யுங்கள், உங்களுடைய மனது சொல்கிறபடி உதவிசெய்ய நினைக்காதீர்கள். மற்றவர்களுக்கு “நன்மைசெய்கிற” நோக்கத்துடன் உதவும்போதுதான், அவர்கள் தடுமாறினாலும்கூட “எல்லாரிடமும் நீடிய சாந்தமாக இருப்போம்” (வச. 14-15).