அவள் என்னுடைய தோழி, என்னுடைய ஆலோசகரும்கூட, அவள் ஓர் ஓவியம் வரைந்தாள். குச்சி பொம்மை போன்ற ஓவியம். அந்த ஓவியத்திற்கு “தனிப்பட்ட வாழ்க்கை” என்று பெயரிட்டாள். பிறகு அந்த ஓவியத்தைச் சுற்றிலும் அரை அங்குல அளவு பெரிதாக வெளிக்கோட்டை வரைந்தாள். அந்த ஓவியத்திற்கு “வெளிப்படையான வாழ்க்கை” என்று பெயரிட்டாள். இந்த இரண்டு ஓவியங்களுக்கும் இடையேயான வித்தியாசம்தான், நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வெளிப்படையான வாழ்க்கைக்கும் இடையேயான நிலைப்பாட்டைக் காட்டுகிறது.
அந்த ஓவியத்தைப் பார்த்தவாறே, “வெளிப்படையான வாழ்க்கையைப் போலவே என்னுடய தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறதா? என்னிடம் நிலைப்பாடு காணப்படுகிறதா?” என்று சிந்தித்தேன்.
கொரிந்துவிலிருந்த சபைக்கு பவுல் நிருபங்களை எழுதினார். இயேசுவைப் போல் வாழும்படி அன்பையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்துகிறார். பிறகு, தன்னை எழு பலமுள்ளவன் என்றும், தோற்றத்தில் பலவீனன் என்றும் குற்றஞ்சாட்டினவர்களுக்கு (2 கொரி. 10:10) அந்த நிருபத்தின் இறுதியில் அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு விமர்சித்தவர்கள் சிறந்த பேச்சால், பணம்வாங்கி போதிப்பவர்களாக இருந்தார்கள். பவுல் கல்வித்திறனில் சிறந்து விளங்கினாலும், மக்கள் புரிந்துகொள்கிற விதத்தில், எளிமையாகப் போதித்தார். கொரிந்தியருக்கு எழுதின முதலாம் நிருபத்தில் “என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது” என்று எழுதியிருந்தார் (1 கொரி. 2:4). ஆனால் இரண்டாவது நிருபத்தில் அவர் எழுதுகிற ஒரு விஷயம் அவருடைய ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது: “அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்” (2 கொரி. 10:11).
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படியோ, அப்படியே தன்னுடைய வெளிப்படையான வாழ்க்கையும் இருப்பதாக பவுல் கூறினார். நாம் எப்படி இருக்கிறோம்?
உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் போலவே உங்களுடைய வெளிப்படையான வாழ்க்கையிலும் ஒழுக்கம் காணப்பட எவ்வாறெல்லாம் முயல்கிறீர்கள்? முற்றிலும் ஒழுக்கத்துடன் வாழ்ந்து தேவனுக்கு எவ்வாறு கனத்தைக் கொண்டுவரலாம்?
அன்புள்ள தேவனே, முதலாவது என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் உண்மையுள்ளவனாக இருக்க உதவும். அப்போதுதான் அதே ஒழுக்கத்தை வெளியிலும் காட்டமுடியும்.