ஜமைக்காவில், மான்டெகோ பேயிலுள்ள செயின்ட்ஜேம்ஸ் மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்று ரென்டெல்லுடன் சேர்ந்துகொள்ள மிகவும் ஆவலாயிருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு தான், இயேசு அவன் மீது வைத்துள்ள அன்பினைப் பற்றி தெரிந்து கொண்டான். நான் ஒவ்வொரு வசந்த காலத்திலும், உயர்நிலைப்பள்ளி பாடகர் குழுவிலுள்ள ஈவி என்ற இளம் பெண்னோடு பிரயாணம் செய்வேன். அப்பொழுது அவள் ரென்டெல்வுடன் சேர்ந்து வேதத்தை வாசித்து, சுவிசேஷத்தை விளக்கிச் சொல்வாள். அப்பொழுது அவன் இயேசுவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டான்.

நான் அந்த விடுதியில் ஆண்கள் பகுதிக்குச் சென்றபோது நான் ரென்டெல்லின் படுக்கையை கவனித்தேன். அது காலியாக இருந்தது. நான் அங்குள்ள செவிலியர் பகுதிக்குச் சென்று விசாரித்த போது, நான் விரும்பாத செய்தியைத் தந்தனர். அவன் மரித்து விட்டான். நாங்கள் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு தான் மரித்தான் என்று தெரிந்து கொண்டேன்.

கண்ணீரின் மத்தியில் நான் ஈவிக்கு இந்த துயரச் செய்தியைத் தெரிவித்தேன். அவளுடைய பதில் “ரென்டெல் இயேசுவோடு மகிழ்ந்திருக்கின்றான்.” மேலும், “நல்லவேளை, இயேசுவைக் குறித்து அவன் உயிரோடிருக்கும் போது அவனுக்குச் சொல்ல முடிந்தது” என்றாள்.

நாம் கிறிஸ்துவில் பெற்றுள்ள நம்பிக்கையை அன்போடு பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டியதின் முக்கியத்துவத்தை அவளுடைய வார்த்தைகள் நினைவுபடுத்தின. எப்பொழுதும் நம்மோடிருக்கின்ற கிறிஸ்துவைக் குறித்த நற்செய்தியை அனைவரிடமும் தெரிவிப்பது என்பது அத்தனை சுலபமானது அல்ல (மத். 28:20). ஆனால், அந்த நற்செய்தி நமக்குள்ளும் ரென்டெல்லுக்குள்ளும் எத்தகைய மாற்றத்தைக் கொடுக்கிறது என்பதைப் பார்க்கும்போது, நாம் போகுமிடமெல்லாம் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை இன்னும் அதிகமாக உருவாக்க ஊக்கப்படுத்தப்படுவோம் (வச. 19).

நான் கண்ட அந்தக் காலியான படுக்கை தந்த வருத்தத்தை என்னால் மறக்கவே முடியாது. அதேபோல் எப்படி ஓர் இளம்பெண்ணால் ரென்டெல்லின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொடுக்க முடிந்தது என்ற மகிழ்ச்சியையும் என்னால் மறக்க முடியாது.