வெளிப்புறமாக கோணலான அந்த ஆலயத்தின் கோபுரத்தைப் பார்த்த மக்களுக்கு அது பதட்டத்தைக் தந்தது. நாங்கள் சில நண்பர்களைச் சந்தித்தபோது அவர்கள் ஒரு வலிமையான புயல் வீசியபோது, பெருமைக்குரிய அந்த உயரமான கோபுரம் கோணலானதை மக்கள் மத்தியில் ஒரு பயத்தையும் ஏற்படுத்தியதை கூறினர்.
சீக்கிரத்திலேயே அந்த கோபரம் சரிபார்க்கப்பட்ட போதிலும், சிரிப்பூட்டின அதன் முன்னிலையை எண்ணிப்பார்த்தேன். ஆலயம் என்றாலே எல்லாம் நேர்த்தியாக அமையப் பெற்ற இடமாகத்தான் பார்க்கப்படும். அது ஒரு நெளிவைக் காட்டும் இடம் என்று யாருமே எதிர்பார்க்கமாட்டார்கள்.
ஆனால், இந்த விழுந்துபோன, உடைந்த உலகில் நாமனைவருமே நமக்குள்ளே இயற்கையாக வரும் பெலவீனங்களையெல்லாம் சேகரித்து வைத்து வளைந்து போனோம். நாம் நம்முடைய குறைகளையும், பாதிப்புகளையும் மூடி மறைக்கவே விரும்புவோம். ஆனால், வேதாகமம் இதற்கு மாறான மனப்பாங்கையே ஊக்குவிக்கின்றது. 2 கொரிந்தியர் 12ல், பவுல் நம்முடைய பெலவீனங்களில் என்று குறிப்பிடும் போது, அவருக்கும் பெயர்சொல்ல முடியாத ஒரு போராட்டம் இருந்தது எனச் சொல்கின்றார். “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்கின்றார். எனவே கிறிஸ்து தன்னுடைய வல்லமையை அவருக்குள் வெளிப்படுத்துகின்றார். இயேசு பவுலிடம், “பலவீனத்திலே என் பலன் பூரணமாய் விளங்கும்” என்றார் (வச. 9) எனவே தான் பவுல், “கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” என்றும், “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (வச. 10) என்றும் கூறுகின்றார்.
நம்முடைய குறைகளை நாம் விரும்புவதில்லை. ஆனால், அவற்றை மறைப்பது என்பது, தேவனுடைய வல்லமை அந்த பலவீனத்தில் செயல்படுவதை நாம் தடுப்பதாகும். நம்முடைய கோணலான பகுதிகளில் இயேசு செயல்படும்படி நாம் அழைக்கும்போது, அவர் அதனை மென்மையாகச் சரிசெய்து நம்முடைய சுயபெலத்தால் நாம் ஒருபோதும் நிறைவேற்ற முடியாததை செய்து தேவன் நம்மை பலப்படுத்துகிறார்.
உன்னுடைய குறைகளை இயேசு சரிசெய்யும்படி அவரை அழைப்பாயாக.
உன் வாழ்வின் ‘குறைகள்’ என்ன? உன் குளைகளின் மூலம், தேவன் தம் பலத்தைத் காட்டுவதை எப்படி நீ காண்கிறோம்?