ஆறே மாதங்களில் ஜெரால்டின் வாழ்க்கை உடைந்து போனது. ஒரு பொருளாதார நெருக்கடி அவனுடைய தொழிலையும் செல்வத்தையும் அழித்துவிட்டது. ஒரு கொடுமையான விபத்து அவருடைய மகனின் வாழ்வை எடுத்துக் கொண்டது. இந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாத அவருடைய தாயார் இருதய நோயால் தாக்கப்பட்டு மரித்தார், அவருடைய மனைவி மனநோயாளியானார், அவருடைய இரண்டு பெண் பிள்ளைகளும் ஆறுதலின்றி தவிக்கின்றனர். சங்கீதக்காரனின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறவே அவரால் முடிந்தது. “என் தேவனே, என் தேவனே. ஏன் என்னைக் கைவிட்டீர்? (சங். 22:1) என்று புலம்பினார்.

இயேசுவை உயிரோடெழுப்பின தேவன் ஒரு நாள் தன்னையும், தன்னுடைய குடும்பத்தையும் இந்த வேதனையிலிருந்து விடுவித்து நித்திய மகிழ்ச்சிக்குள் கொண்டு செல்வார் என்ற ஒரே நம்பிக்கைதான் ஜெரால்ட் வாழ்வதற்கு பெலன் கொடுத்தது. அவர் ஆறாத துயரத்தில் உதவிக்காகக் கதறும் போது தேவன் பதிலளிப்பார் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. தன்னுடைய அவல நிலையில், துன்பங்களின் மத்தியில் சங்கீதக்காரனைப் போன்று தேவனையே நம்பும்படி தீர்மானித்தார். தேவன் அவரை விடுவித்துக் காப்பார் என்ற நம்பிக்கையோடு தேவன் மீதே தன் நம்பிக்கையை வைத்தான் (வச. 4-5).

இந்த நம்பிக்கை ஜெரால்டைத் தாங்கி நடத்தியது. கடந்த வருடங்களில் அவரிடம் எப்படியிருக்கின்றாய்? என்று விசாரிக்கும் போதெல்லாம் அவர், “நன்றாயிருக்கிறேன். நான் தேவனையே நம்பியிருக்கிறேன்” என்பார்.

தேவன் அவருடைய நம்பிக்கையை கனப்படுத்தினார். அவர் தம் வாழ்வை நடத்திச் செல்ல தேவையான ஆறுதலையும், பெலனையும், தைரியத்தையும் கொடுத்தார். அவருடைய குடும்பம் மெதுவாக நெருக்கத்திலிருந்து மீண்டது. சீக்கிரத்திலேயே ஜெரால்ட் தன்னுடைய முதல் பேரப்பிள்ளையை வரவேற்றார். தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதற்குச் சாட்சியாக அவனுடைய அழுகை மாறியது. “என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என நான் இனியும் கேட்க வேண்டியதில்லை. தேவன் என்னை ஆசீர்வதித்தார் என்றார்.

ஓன்றுமில்லை என்று தோன்றும் போதும் தேவன் நம்பிக்கையைத் தருகின்றார்.