இயற்கை காட்சியை ஓவியமாக வரையக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மிகவும் அநுபவம் வாய்ந்த, தொழில் முறை ஓவியர் அவர். என்னுடைய முதல் ஓவியத்தைப் பார்வையிட்டார். என்னுடைய ஓவியத்திற்கு முன்பு அமைதியாக நின்றார். ஒரு கை அவரது நாடியைப் பற்றிக் கொண்டிருந்தது. இது மிகவும் மோசமாக இருக்கின்றது எனக் கூறப் போகின்றார் என நான் நினைத்தேன்.
ஆனால், அவர் அப்படிச் சொல்லவில்லை. இங்கு, வண்ணங்கள் தேர்ந்தெடுத்ததை நான் வரவேற்கிறேன். உணர்வுகள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளதை நான் விரும்புகின்றேன். தூரத்தில் காட்டப்பட்டுள்ள மரங்களை இன்னமும் சற்று பிரகாசமாக்கியிருக்கலாம். அங்கேயுள்ள களைகளின் புதருக்கு மென்மையான விளிம்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்றார். என்னுடைய ஓவியத்தை கலை கண்ணோட்டத்தோடும், நிறத்தின் அடிப்படையிலும் விமர்சிக்க அவருக்கு அதிகாரமிருக்கினறது. இருப்பினும் அவருடைய விமர்சனம் உண்மையானதாகவும், கருணையோடுமிருந்தது.
ஜனங்களை அவர்களின் பாவத்தினிமித்தம் கண்டனம் செய்ய இயேசுவுக்கு முழு அதிகாரமும் இருந்த போதிலும் அவர் பத்துக்கட்டளைகளையும் சுட்டிக்காட்டி சமாரியப் பெண்ணைக் குற்றம் சொல்லவில்லை. இயேசு அவளை யாக்கோபின் கிணற்றண்டையில் சந்திக்கின்றார். அவளிடம் ஒரு சில வாக்கியங்களே பேசுகின்றார். மெதுவாக அவளுடைய வாழ்க்கை முறையைச் சுட்டிக் காட்டுகின்றார். அது அவளை உணர்வடையச் செய்கின்றது. தன்னை ஒரு பாவியாகக் காண்கின்றாள். இத்தகைய ஒரு விழிப்பை ஏற்படுத்தி, இயேசு தன்னை ஜீவத்தண்ணீரைக் கொடுப்பவராக வெளிப்படுத்துகின்றார் (யோவா. 4:10-13).
இந்தத் தருணத்தில் இயேசு பயன்படுத்திய சத்தியம், கிருபை ஆகிய இரண்டையுமே நாமும் அவரோடுள்ள உறவில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் (1:17). நாம் பாவத்தால் மேற்கொள்ளப்படாதபடி அவருடைய கிருபை நம்மைக் காக்கின்றது. பாவம் ஒரு பெரிய காரியமல்ல என்று லேசாக எண்ணாதபடிக்கு அவருடைய சத்தியம் நம்மைக் காக்கின்றது.
நாமும் இயேசுவைப் போல மாறும்படி நம் வாழ்வின் எப்பகுதிகளில் நாம் வளர வேண்டியுள்ளது என்பதை தேவன் நமக்குக் காட்டும்படி இயேசுவை நம் வாழ்வில் வர அழைப்போமா?
இயேசுவே, நீர் என் பாவத்தின் விளைவுகளின்று விடுதலையாக்குவதற்கு நன்றி, உம் திருத்துதலுக்கும், ஊக்கமளிப்பதற்கும் இன்னும் உம்மருகில் நடக்க எனக்கு உதவும்.
உன் வாழ்வில் சில காரியங்களைச் சுட்டிக்காட்டும்படி இயேசு எவ்வாறு கிருபையையும் சத்தியத்தையும் பயன்படுததுகின்றார்? நாம் அவரை இன்னும் முழுமையாக கனப்படுத்தும்படி நீ எப்படி மாற வேண்டுமென அவர் விரும்புகின்றார்?