கோடைகாலம் முழுவதும் என்னுடைய பதட்டம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. நான் என்னுடைய பட்டப்படிப்பை துவங்கயிருந்தேன். நான் எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செயல்படுத்த விரும்புவேன். நான் என்னுடைய மாநிலத்தை விட்டு வெளியே போய் பட்டப்படிப்பில் சேரும் போது, அதனோடு ஒருவேலையும் கிடைக்கவில்லையென்பதால் மிகவும் பதட்டத்;தோடிருந்தேன். நான் கோடையில் பார்த்த வேலை முடிவதற்குச் சற்று முன்பு நான் அந்த கம்பெனிக்காக தொடர்ந்து வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன். நானும் சம்மதித்தேன். தேவன் என்மீது கரிசனையோடிருக்கின்றார், எனப் புரிந்து கொண்டு, என் பதட்டம் நீங்கி மிகுந்த சமாதானம் பெற்றுக் கொண்டேன்.

தேவன் என் தேவையைச் சந்தித்தார். ஆனால், நான் எதிர்பார்த்த நேரத்திலல்ல, அவருடைய நேரத்தில் கொடுத்தார். ஆபிரகாம் தன்னுடைய மகன் ஈசாக்கோடு கடினமான சூழலைச் சந்தித்தான். அவன் தன் மகன் ஈசாக்கை அழைத்துக் கொண்டுபோய் ஒரு மலையில் பலியிடும்படி தேவன் அவனைக் கேட்டார் (ஆதி. 22:1-2). ஒரு தயக்கமுமின்றி ஆபிரகாம் கீழ்ப்படிந்தான். ஈசாக்கை அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றான். அங்குச் சென்றடைய மூன்று நாட்களாயின. ஆபிரகாம் தன் மனதை மாற்றிக் கொள்ள நீண்ட அவசாகமிருந்தது. ஆனாலும் அவன் மாறவில்லை (வச. 3-4).

ஈசாக்கு தன் தகப்பனிடம் கேள்வி கேட்டபோது “ என் மகனே, தேவன் நமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கொள்வார்” என்றான் (வச. 8). ஈசாக்கை பலியிடும்படி கட்டின போது, ஒவ்வொரு முடிச்சிடும் போது ஆபிரகாமின் பதட்டம் அதிகரித்துக் கொண்டேயிருந்திருக்குமல்லவா? தன்னுடைய கத்தியை உயர்த்தினபோதும் பதட்டம் இருந்திருக்குமல்லவா? (வச. 9-10), தேவ தூதன் அவனைத் தடுத்து நிறுத்தியபோது எத்தனை பெரிய விடுதலையாயிருந்திருக்கும் (வச. 11-12). புதருக்குள் சிக்கியிருந்த ஒர் ஆட்டை தேவன் பலியிடும்படி கொடுத்தார் (வச. 3). தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தைச் சோதித்தார். அவன் தன்னை உண்மையுள்ளவனென விளங்கப்பண்ணினான். அந்நேரமே, அந்த நொடியிலேயே தேவன் அவனுக்குத் தேவையான பலியைத் தந்தார் (வச. 14).