அவளுடைய கணவன் மரித்ததிலிருந்து பெட்ஸி, அவளுடைய வீட்டில் தனிமையில்;, டெலிவிஷன் பார்ப்பதும் ஒரு நபருக்குத் தேநீர் தயாரிப்பதுமாக அநேக நாட்களை கழித்து வந்தாள். தனிமையில் வாடும் நபர்களில் அவள் மட்டுமல்ல, 90 லட்சம் பிரிட்டன் மக்களுக்கும் மேலாக (அவர்களுடைய மக்கள் தொகையில் 15 சதவீதம்) தனிமையை உணர்வதாக அடிக்கடி கூறுகின்றனர். இதற்காகவே பிரிட்டன் அரசு, தனிமையைக் கண்காணிக்க ஒரு குமந்திரியை அமர்த்தி எப்படி இவர்கட்டு உதவலாம் என முயற்சித்து வருகிறது.
தனிமைக்கான சில காரணங்கள் யாவரும் அறிந்தவை. நாம் ஒரேஇடத்திலிருந்து ஆழமாய் வேர்விடாமல் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக் கொண்டேயிருக்கிறோம். நம்மை நாமே கவனித்துக் கொள்ள முடியுமென நம்புகிறோம். பிறரோடு தொடர்பு வைத்துக் கொள்ள நமக்குத் தேவையேற்படுவதில்லை. தோழில் துறையிலுள்ள தொடர்பினால் நாம் தனிமையாக்கப்படுகிறோம். ஓவ்வொருவரும் நம்மிடமுள்ள தொடர்பு சாதனங்களின் திரையிலேயே மூழ்கி விடுகின்றோம்.
நான் அந்;த தனிமையின் இருண்ட பகுதியை உணர்ந்திருக்கின்றேன். ஒருவேளை, நீங்களும் கூட உணர்ந்திருக்கலாம். இதற்காகத்தான் நமக்கு விசுவாசிகளின் ஐக்கியம் தேவைப்படுகிறது. இயேசு கிறிஸ்துவாகிய பலியைக் குறித்து ஆழ்ந்து விவாதிக்கின்ற எபிரெயர் புத்தகத்தில், சபை மக்கள் கூடி வருதலை தொடர்ந்து செய்யும்படி நம்மை ஊக்குவிக்கின்றது (10:25). நாம் தேவனுடைய குடும்பத்தின் பிள்ளைகள். எனவே நாம் ஒருவரையொருவர் சகோதர, சகோதரிகளாகப் பாவித்து அன்பு செய்யக் கடமைப்பட்டிருக்கின்றறோம். “சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்” (13:1-2) என்று காண்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் முயற்சி எடுத்தால், நம்மீது கரிசனை கொள்ள பிறர் இருக்கின்றார்கள் என்ற உணர்வினை ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்வோம்.
தனிமையை உணரும் மக்கள் நாம் காட்டும் கருணைக்குப் பதில் செய்யமாட்டர்கள். ஆதலால் இந்தக் காரணத்திற்காக விட்டுவிடாதிருங்கள். இயேசு, “நான் உன்னை விட்டு விலகுவதுவில்லை; உன்னைக் கை விடுவதுமில்லை” (13:5) என்று கூறியிருக்கின்றாரே. நீ தனிமையில் இருக்கின்றாயா? இயேசுவின் குடும்பத்தினருக்குப் பணிசெய்ய என்னென்ன வழிகளுள்ளன? இயேசுவுக்குள் நண்பர்களாயிருப்வர்கள் இந்த வாழ்விலும், அதற்குப் பின்னரும் தொடர்ந்து நண்பர்களாக இருப்பர்.
உன்னுடைய நட்பு யாருக்குத் தேவையாயிருக்கிறது? இந்த வாரத்தில் உன்னுடைய ஆலயத்தில் அல்லது அருகிலுள்ள யாருக்காகிலும் உதவி செய்ய உன்னால் முடியுமா?
தேவனுடைய குடும்பத்தின் முக்கிய நோக்கமே தனிமையை நீக்குவது தான்.