ஒரு கலங்கரை விளக்கின் வெளிச்சத்தைப் போன்று அந்தப் படம் என் கண்களைக் கவர்ந்தது. ஒரு பட்டணத்திலுள்ள பெரிய மருத்துவமனையின் நீண்ட வழியில் அது வைக்கப்பட்டிருந்தது. அழகிய வண்ணங்களால் சித்திரம் தீட்டப்பட்ட நவாஜோ என்ற அமெரிக்க பழங்குடியினரின் உருவங்கள் என்னைக் கவர்ந்து, அதன் அழகைக் கண்டு வியக்கும்படி செய்தது. “இதனைப் பாருங்கள்” என நான் என்னுடைய கணவன் டானை அழைத்தேன்.
அவர் எனக்குச் சற்று முன்பாக நடந்து சென்று கொண்டிருந்தார். நான் அங்கு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த மற்ற படங்களையெல்லாம் விட்டுவிட்டு, தயங்கினபடியே இந்த ஒன்றினையே உற்று நோக்கி, “அழகாயிருக்கிறது” என முணுமுணுத்தேன்.
நம் வாழ்விலுள்ள அநேக காரியங்கள் மிகவும் அழகாயிருக்கின்றன. அவை தரம் மிகுந்த ஓவியங்கள், இயற்கை காட்சிகள் மனதைக் கவரும் கைவினைப் பொருட்கள், என பலப்பல இதேப் போன்றே ஒரு குழந்தையின் சிரிப்பும், ஒரு நண்பனின் ஹலோ என்ற சொல்லும், ராபின் பறவையின் நீல நிற முட்டைகளும் கடல் சிப்பியின் வலிமையான விளிம்புகளும் போன்று இன்னும் அநேகம். நம் வாழ்வு நமக்குக் கொடுக்கின்ற சுமைகளிலிருந்து நம்மை விடுவிக்கும்படி, “ தேவன் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்கிறார்” (பிரச. 3:11) இந்த அழகில் நாம் தேவனுடைய நேர்த்தியான படைப்பின் ஒரு சிறிய பகுதியைக் காண முடிகிறது எனவும், வரப்போகிற அவருடைய மகிமையின் ராஜ்ஜியத்தின் ஒரு சிறிய காட்சியைக் காணமுடிகிறது எனவும் வேத வல்லுனர்கள் விளக்குகின்றனர்.
அவருடைய இராஜ்ஜியத்தின் நேர்த்தியான காட்சிகளை நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க முடியும் எனவே தான் நாம் அதின் ஒரு சிறு பகுதியைக் கண்டு ரசித்துப் பார்க்கும்படி தேவன் இவ்வுலகின் அழகினைக் காட்டுகின்றார் இவ்விதமாக தேவன், “உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கின்றார்” (வச. 11). சில நேரங்களில் நம் வாழ்வு மங்கிப்போய் பயனற்றுப் போனதைப் போன்று காணப்படும். ஆனால், தேவன் இரக்கமாக நம் வாழ்வின் அழகினை நாம் கண்டு ரசிக்கும்படியாகச் சில தருணங்களைத் தருகின்றார்.
நான் ரசித்த படத்தை உருவாக்கிய கலைஞன் ஜெரார்ட் கட்டிஸ் டிலானோ “தேவன் எனக்கு அழகினை உருவாக்கும் திறமையைக் கொடுத்துள்ளார். அதனையே நான் செய்யும்படியும் தேவன் விரும்புகின்றார்” எனக் கூறுகின்றார்.
இத்தகைய அழகினைப் பார்க்கும் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்? தேவனுடைய மகிமையை நாம் கண்டு அநுபவிக்கும் போது வரப்போகின்ற நித்தியத்தை நினைத்து தேவனைத் துதிப்போம்.
தேவன் இவ்வுலகில் வைத்துள்ள அழகினைப் பார்க்கும்போது எவ்வாறு செயல்படுவாய்? அந்த அழகு எவ்வாறு தேவனைப் பிரதிபலிக்கின்றது?