அதிகாலை வேளையில் நான் வேகமாக எங்களது முன் அறையின் ஜன்னல் வழியே எங்கள் வீட்டின் பின்புறமிருக்கும் அவாந்தரவெளியைப் பார்த்தபடியே கடந்து சென்றேன். அடிக்கடி, நான் ஒரு பருந்தையே அல்லது ஓர் ஆந்தையையோ மரக் கிளைகளில் அமர்ந்திருக்கக் காண்பேன். அவை அந்தப் பகுதி முழுவதையும் கண்காணித்துக் கொண்டிருக்கும். ஒரு நாள் காலைப் பொழுதில், ஒரு மொட்டைத்தலை கழுகு உயர்ந்த கிளையொன்றில் அமர்ந்திருக்கக் கண்டு வியந்தேன். அது அந்தப் பகுதி ழுழுவதையும் தன்னுடைய எல்லைப்பகுதி என்ற எண்ணத்தோடு அதனைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அது காலை உணவைத் தேடிக் கொண்டிருந்திருக்கலாம். அதனுடைய பார்வை ராஜபார்வையாயிருந்தது.

2 நாளாகமம் 16ல், ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி (தேவனுடைய தீர்க்கதரிசி) அரசனிடம், அவனுடைய செயல்களெல்லாம் ஒரு ராஜபார்வையால் கண்காணிக்கப்படுகின்றன என்கின்றார். அவன் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் “நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்து கொண்டு இருக்கிறீர் (வச. 7). மேலும், “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (வச. 9) என்றார். கர்த்தரைத் சார்ந்து கொள்ளாமல் மனிதரைச் சார்ந்து கொண்டபடியால் இது முதல் யுத்தங்கள் தொடர்ந்து வரும் என்றான்.

இந்த வார்த்தைகளை நாம் வாசிக்கும் போது, தேவன் நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு இரையின் மேல் பாய்கின்ற ஒரு பறவையைப் போல, நம்முடைய ஆபத்து நேரத்தில் அவர் நம்மீது பாய்ந்து நம்மைக் கவ்விக்கொள்வார் எனத் தவறாக உணர்ந்துவிடாதிருங்கள். அனானியின் வார்த்தைகள் நம்மை உண்மைக்கு நேராகக் கொண்டு செல்கின்றன. தேவன் நம்மைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிருக்கின்றார். நம்முடைய தேவையின் போது நாம் அவரைக் கூப்பிடும்படி அவர் காத்திருக்கின்றார் என்பதையே அனானி நமக்கு எடுத்துரைக்கின்றார்.

எங்களுடைய பின் வளாகத்தில் அமர்ந்திருந்த கழுகினைப் போல, கர்த்தருடைய கண்களும் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. உனக்குள்ளும், எனக்குள்ளும் உண்மையிருக்கிறதா எனக் கண்டறிய அவை பார்த்துக் கொண்டேயிருக்கின்றன. எப்படி அவரால் நமக்கு நம்பிக்கையையும், உதவியையும் கொடுக்க முடியும்?