என்னுடைய பேரன் ஜேய் சிறுவனாயிருந்தபோது, அவனுடைய பெற்றோர் அவனுடைய பிறந்தநாளின்போது அவனுக்கு ஒரு புதிய டீ-சட்டையை வாங்கிக் கொடுத்தனர். அவன் அதனை உடனடியாக அணிந்து கொண்டு, பெருமையாக அந்த நாள் ழுழுவதும் இருந்தான்.

மறுநாள் காலை அவன் அந்த டீ-சட்டையோடு காட்சியளித்தபோது அவனுடைய தந்தை அவனிடம், “ஜேய், இந்த டீ-சட்டை உனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றதா?” எனக் கேட்டார்.

“நேற்றைய தினத்தைப் போன்றில்லை” என்று பதிலளித்தான்.

பொருட்களைச் சேகரிப்பதும் இத்தகைய விளைவையே தரும். வாழ்வின் நல்ல பொருட்கள் கூட நாம் தேடுகின்ற ஆழ்ந்த, நிரந்தர மகிழ்ச்சியைத் தருவதில்லை. நம்மிடம் அநேகப் பொருட்களிருந்தாலும் நாம் இன்னும் திருப்தியோடும் மகிழ்ச்சியோடும் இருப்பதில்லை.

புதிய ஆடைகள், புதிய வாகனம், நவீன அலைபேசி, கைக்கடிகாரம். என பொருட்களைக் சேகரிப்பதால் உலகத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம். ஆனால், எந்தப் பொருளாலும் அது நேற்று தந்த மகிழ்ச்சியை இன்று தர இயலாது. ஏனெனில், நாம் தேவனுக்கென்று படைக்கப்பட்டவர்கள். எனவே எந்த உலகப் பொருளும் நம்மை நிரந்தர மகிழ்ச்சியைக் தராது. ஒரு நாள் இயேசுவும் தன்னுடைய உபவாசத்தை முடித்துக் கொண்டபோது பசியோடிருந்தார். சாத்தான் அவரிடம் வந்து அப்பங்களை உருவாக்கி தன்னுடைய பசியை ஆற்றிக்கொள்ளுமாறு சோதிக்கின்றான். இயேசு அவனிடம் உபாகமம் 8:3ல் சொல்லப்பட்டுள்ள, “மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்ற வார்த்தையினால் பதிலளித்தார் (மத். 4:4).

அப்பத்தினால் மட்டும் உயிர்வாழ முடியாது. ஏனெனில் நாம் ஆவிக்குரிய மக்கள் என்ற உண்மையை இயேசு வெளிப்படுத்துகின்றார். எனவே உலகப் பொருட்களால் மட்டும் நாம் உயிர் வாழ முடியாது.