கிறிஸ்மஸ் விடுமுறையின் போது எங்கள் குடும்பத்தின் ஐந்து பேரும் ரோம் நகருக்குச் சென்றிருந்தோம். ஒரே இடத்தில் இத்தனை அதிகமான ஜனக்கூட்டம் நிரம்பியிருக்கும் காட்சியை நான் இதற்குமுன் கண்டதேயில்லை. கூட்டத்தினூடே நாங்கள் ஊர்ந்து சென்று வாட்டிக்கன், கொலிசியம் போன்ற இடங்களைப் பார்வையிட்டோம். நான் என்னுடைய குழந்தைகளிடம் சூழ்நிலையைக் குறித்த விழிப்புணர்வோடு இருக்குமாறு அடிக்கடி வலியுறுத்திக் கொண்டேயிருந்தேன். நீ எங்கிருக்கின்றாய்,
யார் உன்னைச் சுற்றியிருக்கின்றார்கள், உன்னைக் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பனவற்றின் மீது கவனமாயிருக்கும்படி கூறிக் கொண்டேயிருந்தேன். நாம் இருக்கின்ற இடமும், நம்மைச் சுற்றியுள்ள இடமும் பாதுகாப்பானவையல்ல எனக் கூறும்படியான ஓர் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அலைபேசிகளையும் காதில் வைக்கும் மைக்ரோ போன்களையும் பயன்படத்திக் கொண்டிருப்பதால் பெரும்பாலான சிறியவர்கள் (பெரியவர்களும்) தன்னைச் சுற்றியிருப்பவற்றைக் குறித்து விழிப்போடிருக்க பழகிக்கொள்வதில்லை.
சூழ்நிலையைக் குறித்த விழிப்புணர்வு என்பதை பிலிப்பி பட்டணத்திலுள்ள விசுவாசிகளுக்காக பவுல் ஏறெடுத்த ஜெபத்தில் காணலாம். பிலிப்பியர் 1:9-11ல் உள்ளது. பவுல் அவர்களின் மீது கொண்டுள்ள ஆவல் என்னவெனில் அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும், எங்கிருக்கின்றோம், எப்படிப்பட்ட சூழலிலிருக்கின்றோம் என்பதைக் குறித்த ஓர் எண்ணத்தை நாளுக்கு நாள்; அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே. தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்;காக ஓர் இலக்கினை ஏற்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் மேலான ஒரு நோக்கத்தோடு பவுல் ஜெபிக்கின்றார். தேவனுடைய அன்பைப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஜனங்கள் தங்களைப் பரிசுத்தமும் குற்றமற்றவர்களாகவும் காத்துக் கொண்டு தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி கிறிஸ்து இயேசுவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாக, இடறலற்றவர்களாக வாழும்படி ஜெபிக்கின்றார். தேவன் நம் வாழ்வில் இருக்கின்றார். நாம் அவரையே மேலும் மேலும் சார்ந்து வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் போதுதான் இத்தகைய வாழ்வு நமக்குள் துளிர்க்கும், நாம் தேவனையும் பிரியப்படுத்த முடியும். மேலும் நாம் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையிலிருந்தாலும் கிறிஸ்துவின் அன்பில் நிறைந்தவர்களாய் அங்கு அவருடைய அன்பைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியும்.
நீ எப்படிப்பட்ட சூழல்களைச் சந்திக்கின்றாய்? அந்த சூழலிலிருப்பவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பை எப்படி எடுத்துச் செல்லலாம்?