வியக்கும்படி செய்ய தீர்மானித்தனர். எங்கள் ஆலய அங்கத்தினர்கள், ஞாயிறு பாடசாலை வகுப்பறையை பலூன்களால் அலங்கரித்து, அங்கு ஒரு சிறிய மேசையை வைத்து, அதில் ஒரு கேக்கை வைத்திருந்தனர். என்னுடைய மகன் கதவைத் திறந்த போது அனைவரும் ஒன்று சேர்ந்து, “மகிழ்ச்சியான பிறந்த நாள்” என வாழ்த்தினர்.

பின்னர் நான் கேக்கை வெட்டிய போது என்னுடைய மகன் என் காதுகளில் மெதுவாக, “அம்மா, ஏன் இங்கிருக்கின்ற அனைவரும் என்னை நேசிக்கின்றார்கள்?” என்று கேட்டான். நானும் அதே கேள்வியையே கேட்கின்றேன்! அவர்களுக்கு எங்களைக் கடந்த ஆறுமாதங்களாகத்தான் தெரியும், ஆனால் அவர்கள் அநேக நாட்கள் பழகிய நண்பர்கள் போன்று எங்களிடம் நடந்து கொள்கின்றனர்.

இவர்கள் என்னுடைய மகன் மீது வைத்திருக்கும் அன்பு, தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் பிரதிபலிக்கின்றது.தேவன் ஏன் நம்மை இவ்வளவு நேசிக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளவே முடியாது. ஆனாலும் அவர் நம்மை நேசிக்கின்றார். அவருடைய அன்பு நமக்கு இலவசமாக கொடுக்கப்படுகின்றது. அவருடைய அன்பைப் பெற நாமொன்றும் செய்யவில்லை. இருப்பினும் அவர் விவரிக்க முடியாத அளவு அன்பு கூருகின்றார். வேதாகமத்தில் தேவன் அன்பாகவே இருக்கிறார் (1 யோவா. 4:8) எனக் காண்கின்றோம். அன்பு அவருடைய தன்மையின் ஒரு பகுதி.

தேவன் நம்மீது அன்பினைப் பொழிந்து கொண்டிருக்கின்றார். எனவே நாமும் அந்த அன்பினை பிறர்மீது காட்டுவோம். இயேசு தன்னுடைய சீடர்களிடம், “நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்… நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்” என்றார் (யோவா. 13:34-35).

எங்களுடைய ஆலயத்தின் ஜனங்கள் எங்களை நேசிக்கின்றார்கள், ஏனெனில், தேவனுடைய அன்பு அவர்களில் இருக்கின்றது. அவருடைய அன்பு அவர்கள் வழியாக செயல்பட்டு, அவர்களை தேவனுடைய சீடர்களாகக் காண்பிக்கின்றது. நம்மால் தேவனுடைய முழு அன்பையும் புரிந்துகொள்ள முடியாது, ஆனால், அவருடைய விவரிக்க முடியாத அன்பின் எடுத்துக்காட்டாக, பிறர்மீது அன்பைப் பொழிய முடியும்.