நான் என் தந்தையைக் குறித்து நினைத்துப் பார்க்கும்போது, அவர் ஒரு சிறந்த வெளிவேலையைச் செய்பவராக, எப்போதும்; சுத்தியலைக் கொண்டும், தோட்ட வேலையிலும், மிகச்சிறந்த கருவிகளும், சிறிய இயந்திரங்களையும் கொண்ட அறையிலிருந்து வேலை செய்வதும் தான் என் நினைவில் வருகிறது. அவருடைய கரங்கள் எப்பொழுதும் ஏதோ ஒரு வேலையையோ, திட்டத்தையோ செய்துகொண்டேயிருக்கும். சில வேளைகளில் ஒர் கார் நிறுத்தும் அறையை செய்துகொண்டிருப்பார். அல்லது ஒரு சிறிய மேசையைச் செய்வார், அல்லது பறவைக்கான ஒரு வீட்டை தயாரிப்பார். சில வேளைகளில் பூட்டுகளைச் சரி செய்வார், சிறிய ஆபரணங்களை வடிவமைப்பார், கண்ணாடியில் சித்திரவேலை செய்வார்.

என்னுடைய தந்தையைக் குறித்து நினைக்கும்போது, அது என்னை என்னுடைய பரலோகத் தந்தையும், படைப்பாளருமானவரை நினைக்கச் செய்கின்றது. அவரும் தன்னுடைய வேலையில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர். ஆரம்பத்தில் ‘தேவன் பூமியை அஸ்திபாரப்படுத்தினார்… அதற்கு அளவு குறித்தார்… அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே” (யோபு 38:4-7) அவருடைய படைப்புகளெல்லாம் ஒரு கலைநயமிக்க வேலை, மிகக் சிறந்த வேலை. நம்மை பிரமிக்கச் செய்யும் அழகிய உலகினை அவர் படைத்தார். ‘அது மிகவும் நன்றாயிருந்தது” (ஆதி. 1:31) என்று சொன்னார்.

அவருடைய அழகிய கலைப் படைப்புகளில் நீயும் நானும் உண்டு. தேவன் நம்மை மிக நுணுக்கமாகவும், தெளிவாகவும் படைத்தார் (சங். 139:13-16). அவர் நமக்குப் பொறுப்புகளைக் கொடுத்துள்ளார். அவருடைய சாயலை நமக்குத் தந்து, நமக்குள்ளே இலக்கினையும், அதனை நிறைவேற்றும்படி வேலைசெய்யும் ஆர்வத்தையும் கொடுத்துள்ளார். அதில் இப்புவியையும் அதிலுள்ள படைப்புகளையும் ஆள்வதும் பாதுகாப்பதும் அடங்கும் (ஆதி. 1:26-28,2:15). நாம் எத்தகைய வேலை செய்தாலும் நம்முடைய வேலையிலோ, அல்லது ஓய்வுவேளையிலோ அவருக்காக முழு மனதோடு வேலைசெய்ய நமக்குத் திறமையையும் ஆற்றலையும் தருகின்றார்.

நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் தேவனைப் பிரியப்படுத்தும்படி செய்வோமாக.