குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு, 38 வருடங்களுக்குப் பின், 2018 ஜனவரி 30 ஆம் நாள் மால்கம் அலெக்சாண்டர் சிறைச்சாலையை விட்டு சுதந்திர மனிதனாக வெளியே நடந்தார். டி.என்.எ சாட்சிகள் அலெக்சாண்டரை குற்றவாளியல்லவென்று காண்பிக்க, தொடர்ந்து தான் குற்றமற்றவன் என்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்த அலெக்சாண்டரின் வாக்குகளின் மத்தியில் வெளியான அனைத்து நீதிமன்ற செயல்களும் அவருக்கு எதிராக அநீதியாக தீர்ப்பிட்டன. குற்றவாளியின் சார்பாக செயல்பட்ட திறமையற்ற அரசு வழக்கறிஞர்கள், ஜோடிக்கப்பட்ட சாட்சிகள், சந்தேகத்தைக் கொண்டுவரும் விசாரனை யுக்திகள் அனைத்தும் சேர்ந்து ஓர் அப்பாவி மனிதனை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் சிறையிலடைத்தது. கடைசியாக விடுதலைப்பெற்று வெளிவந்த போது, அலெக்சாண்டர் அளவிடமுடியாத கருணையைக் காண்பித்தார். ‘நீ கோபத்தோடிருக்கக்கூடாது. இன்னும் கோபத்தோடிருக்க போதிய காலமில்லை” என கூறிக்கொண்டார்.

அலெக்சாண்டரின் வார்த்தைகள் ஆழ்ந்த கருணையின் வார்த்தைகள். அநீதி அவருடைய முப்பதெட்டு ஆண்டு வாழ்க்கையை அழித்துவிட்டது. அவருடைய பாரம்பரியத்தை கொன்றுவிட்டது. அப்படியாயின் நாம் கோபத்தோடும், வெறியோடுமல்லவா இருக்கவேண்டும். அலெக்சாண்டர் தன்மீது திணிக்கப்பட்ட குற்றங்களை சுமந்து, உள்ளம் உடைக்கப்பட்டவராக அநேக ஆண்டுகளைக் கழிக்க நேரிட்ட போதிலும், அவர் தீமையினால் மேற்கொள்ளப்படவில்லை. தன்னுடைய முழு பெலத்தையும் பழிவாங்கும்படி செலவிடாமல், பேதுரு கூறிய நிலையை வெளிப்படுத்துகின்றார். ‘தீமைக்கு தீமையையும் உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல்” என்பதை செயலில் காட்டினார் (1 பேது. 3:9).

வேதாகமம் இன்னும் ஒருபடி மேலேயே கூறுகின்றது. பழிவாங்கலுக்குப் பதிலாக ஆசீர்வதியுங்கள் (வச. 9) எனக் கூறுகின்றது. நமக்கு அநீதியாக தீங்கிழைத்தவர்களுக்கு மன்னிப்பையும், நல்வாழ்விற்கான நம்பிக்கையையும் கொடுக்கவேண்டும். அவர்களின் தீய செயல்களை காரணம் காட்டாமல், நம்முடைய குற்றங்களை இயேசு சிலுவையில் சுமந்ததாலேயே நாம் தேவ இரக்கத்தைப் பெற்றுள்ளோம். நாமும் அந்த இரக்கத்தைப் பிறருக்குக் காட்டுவோம். நமக்கு அநீதியிழைத்தவருக்கும் காட்டுவோம்.