என்னுடைய பாட்டியம்மா ஒரு மிகச்சிறந்த தையல்காரி. அவளுடைய சொந்த இடமான டெக்ஸாஸில் அநேக போட்டிகளில் வெற்றி பெற்றவர். அநேக முக்கிய கொண்டாட்டங்களின் போது தன்னுடைய கையால் தைக்கப்பட்ட உடைகளைப் பரிசாக வழங்குவது அவர்களது வழக்கம். என்னுடைய உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பின் போது, சிவப்பு நிற, உயர்ரக கம்பளி நூலால் தைக்கப்பட்ட குளிர்கால ஆடையை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். நீலம் கலந்த பச்சை நிற மெத்தையை என் திருமணத்திற்குப் பரிசாகக் கொடுத்தார்கள். ஒவ்வொரு கலை அம்சமிக்க பகுதியிலும் அவளுடைய பெயர் பொறிக்கப்பட்ட ஏதாவது ஒரு பொருள் இருப்பதைக் காண்பேன் ‘உனக்காக, என் கரத்தால் செய்யப்பட்டது – முன்னா” என்று எழுதப்பட்டிருக்கும். தையலால் எழுதப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் பாட்டியம்மா என்மீது வைத்திருக்கும் அன்பினைக் காட்டும். மேலும் அவள் என்னுடைய எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டும் வல்லமையுள்ள வார்த்தைகளாக இருக்கும்.
எபேசு சபை மக்களுக்கு பவுல் எழுதும்போது, நாம் இவ்வுலகில் வாழும் நோக்கம் என்னவெனில், ‘இயேசு கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு நற்கிரியைகளைச் செய்கிறதற்கு தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்” என்கின்றார் (2:10). இங்கு செய்கை என்பது ஒரு கலைஞனின் கைவினை அல்லது மிகச்சிறந்த படைப்பு என குறிப்பிடப்படுகிறது. பவுல் இதனை விளக்கும்போது, தேவன் நம்மை அவருடைய கைவினையாகப் படைத்து, நாமும் நற்கிரியைகளைச் செய்து, இயேசுவோடு நமக்குள்ள மீட்கப்பட்ட உறவின் வெளிப்பாடாகத் திகழவேண்டும் என்கின்றார். இந்த உலகில் நாம் அவருடைய மகிமைக்கென உருவாக்கப்பட்டுள்ளோம். நம்முடைய சொந்த நற்கிரியைகளால் நம்மை இரட்சிக்க முடியாது. ஆனால், தேவனுடைய கரம், அவருடைய நோக்கத்திற்காக நம்மை உருவாக்கியுள்ளதால் நாமும் பிறரை தேவனுடைய பெரிய அன்பண்டை கொண்டுவர, அவர் நம்மை பயன்படுத்த முடியும்.
என்னுடைய முன்னா தையல் வேலையில் முனைந்து, அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பினையும் அதன் தீவிரத்தையும் எனக்குக் காட்டியபோது, நானும் இவ்வுலகில் எனக்குரிய நோக்கத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. தேவனுடைய விரல்கள் என் நாட்களின் அழகினை சரிப்படுத்தி உருவாக்கினபோது தேவனுடைய கரம், அவருடைய அன்பையும், நோக்கத்தையும் என் இருதயத்தில் தைத்து வைத்தார். எனவே, நான் அவருடைய அன்பை அறிந்துகொள்ளவும் முடிகிறது. அவருடைய கைவினையை பிறருக்குக் காட்டவும் முடிகிறது.
எந்த நற்செயல்களைச் செய்யும்படி தேவன் உன்னை உருவாக்கினார்? யாருக்கு, அவருடைய அன்பை நீ காட்டப்போகின்றாய்?